தமிழறிஞரும், தலைசிறந்த இலக்கிய சொற்பொழிவாளருமான தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
கம்பராமாயணம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை கொண்ட நெல்லைக் கண்ணன் அவர்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய மேடைகளில் சொற்பொழிவாளராகவும், பட்டிமன்ற நடுவராகவும் திகழ்ந்தவர்.
இடதுசாரி இயக்கங்கள் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்த நெல்லை கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நடத்திய பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றவர். இடதுசாரி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் தன்னார்வத்துடன் ஈடுபட்டவர்.
தமிழக அரசு சமீபத்தில் இவருக்கு இளங்கோ அடிகள் விருது கொடுத்து கவுரவித்தது. இந்த விருது உட்பட பல விருதுகளை பெற்ற அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்