சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

தீர்மானம் – 3 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்வோம்!

16 Copy

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு. புகழேந்தி அவர்கள் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, வரும் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த 18வது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் இந்தியா கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்ற பெற வைத்துள்ளனர். பாஜக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி முழுமையாக தோல்வி அடைந்துள்ளது. மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் இந்திய அரசியல் சாசனம் ஆகியவற்றில் தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது.

மேற்படி நம்பிக்கை மற்றும் மாநில உரிமைகளை பாதுகாக்க, விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள், திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்களை மகத்தான முறையில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வேண்டுகோள் விடுக்கிறது. விக்கிரவாண்டி தொகுதி மற்றும் விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் அன்னியூர் சிவா அவர்களின் வெற்றியை உறுதி செய்திட பாடுபட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்