திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 92வது பிறந்தநாளையொட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது இளம் வயதிலேயே தந்தை பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஆசிரியர் திரு. கி. வீரமணி அவர்கள் சிறந்த பேச்சாளரும், சிறந்த கட்டுரையாளருமாவார். சமூக நீதிக் கொள்கைகளை முன்னெடுத்து தொடர்ந்து களத்தில் நிற்பவர். ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக பல முறை சிறைப்பட்டவர். மதவெறி இந்துத்துவா சக்திகளுக்கு எதிராகவும், மூடக்கருத்துக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வரும் போராளி. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இன்னும் பல ஆண்டுகள் வாழ நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர்