தீர்மானங்கள்மாநில செயற்குழு

கோவையில் கணிணி நிறுவனம் மூடல் மூவாயிரம் இளம் தொழிலாளர்கள் வேலையிழப்பு தமிழக அரசு தலையிட்டு தீர்வுகாண சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தீர்மானம் 3

கோவை மாநகரின் இருபகுதிகளில் போக்ஸ் எஜூமேட்டீஸ் என்னும் அமெரிக்க நிறுவனம் கணிணி வழியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அமெரிக்க மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியினைச் செய்து வந்துள்ளது. இதில் சுமார் 3000 இளம் ஆண் – பெண் தொழிலாளர்கள் 5 ஆண்டு முதல் 15 ஆண்டு வரை வேலை செய்து வந்துள்ளார்கள்.

இந்த நிலையில், கடந்த 25ந் தேதி அந்நிறுவனம் எவ்வித முன்னறிவிப்பு இல்லாமல் மின்னஞ்சல் மூலமாக நிறுவனம் மூடப்பட்டதாக அறிவித்துவிட்டது. தமிழ்நாடு அரசினுடைய தொழிலாளர் நலச் சட்டங்கள் எதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. வேலை செய்து வந்த பணியாளர்களும் அவர்களது குடும்பத்தாரும் பதற்றத்துடன் இருந்து வருகிறார்கள்.

முற்றிலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தெருவில் நிற்கும் இப்பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசும், தொழிலாளர் நலத்துறையும் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்திட வேண்டுமென சிபிஐ(எம்) மாநிலக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

Leave a Reply