செய்தி அறிக்கை

சீத்தாராம் யெச்சூரி முதலாமாண்டு நினைவு தினம்! தமிழகம்  முழுவதும் சிபிஐ(எம்) தோழர்கள் 1000 பேர் உடல் தான இயக்கம்!! மாநிலக்குழு அலுவலகத்தில் நாளை (12.9.25) துவக்கம்!!!

Statenmnet

சீத்தாராம் யெச்சூரி முதலாமாண்டு நினைவு தினம்! தமிழகம்  முழுவதும் சிபி(எம்) தோழர்கள் 1000 பேர் உடல் தான இயக்கம்!! மாநிலக்குழு அலுவலகத்தில் நாளை (12.9.25) துவக்கம்!!!

சிபிஐ(எம்) தலைவர்கள் மற்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்பு!!!


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றி மறைந்த தோழர் சீத்தராம் யெச்சூரி அவர்களின் முதலாமாண்டு நினைவு தினமான செப்டம்பர் 12, 2025 அன்று தமிழகம் முழுவதும் சிபிஐ(எம்) தோழர்கள் 1000 பேர் உடல் தானம் செய்யவுள்ளனர். சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான பி.ஆர்.நினைவகத்தில் நடக்கும் அஞ்சலி மற்றும் உடல்தானம்  நிகழ்ச்சியில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன், மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், க. பாலபாரதி, மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்நிகழ்வுக்கு தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சி / ஊடகங்கள் சார்பில் ஒளிப்பட / புகைப்பட நிருபர்களை அனுப்பி வைத்து செய்தி சேகரித்து வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

நாள் : 12.09.2025
நேரம் : காலை 11.00 மணி
நிகழ்ச்சி : உடல் தானம் வழங்கும் இயக்கம்

இடம் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகம்
பி.ஆர். நினைவகம், 27 வைத்தியராமன் தெரு, தி. நகர்,
சென்னை – 600 017.
தொடர்புக்கு போன்: 24341205 / 24326800 / 24326900

வெ.ராஜசேகரன் (அலுவலக செயலாளர்)