மாதவிடாய் விடுப்பு உரிமை என்பது உழைக்கும் பெண்களின் உரிமையின் ஒரு பகுதியே என்றும், பெண்களின் உயிரியல் யதார்த்தங்களை உச்சநீதி மன்றத் தீர்ப்பு உணரவில்லை.
வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு கோரும் மனுவை தள்ளுபடி செய்யும் போது உச்சநீதி மன்றம் சில எதிர்மறையான மற்றும் பாரபட்சமான கருத்துக்களை தெரிவித்துள்ளது. அத்தகைய சட்டம் இயற்றப்பட்டால் யாரும் பெண்களை வேலைக்கு அமர்த்த மாட்டார்கள் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அத்தகைய விடுப்பு தொழில்துறையின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் என்று நீதிமன்றம் மேலும் கூறியிருப்பது மிகவும் விந்தையாகும். இவ்வாறு நீதிமன்றம் கருத்து கூறியிருப்பதன் மூலம், பெண்களின் உயிரியல் யதார்த்தங்கள் குறித்து அவர்களின் பணியிடங்களில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதில்லை என்ற ஆணாதிக்கக் கருத்தை நீதி மன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மாதவிடாய் விடுப்பை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆபத்தானது என்று முத்திரை குத்துவதன் மூலம், பெண்களின் சுகாதாரத் தேவைகள் நிறுவனங்களின் உற்பத்தித் திறனுக்கு இரண்டாம் பட்சம் தான் என்று அது மறைமுகமாகக் கூறியுள்ளது. மாதவிடாய் மற்றும் இந்த கால கட்டத்தில் பெண்கள் அனுபவிக்கும் வலியைப் புறக்கணிப்பது பிரச்சனையை மறைத்து, பெண்களை துன்பப்பட வைக்கிறது. பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு அங்கீகரிக்கப் பட வேண்டுமென்றால், அவர்கள் கண்ணியத்துடன் வேலை செய்ய வேண்டு மென்றால், விடுப்பு விதிகளில் ஒருவரின் மாதவிடாய் சுழற்சியின் போது எடுக்கப்படும் விடுப்பும் அடங்கும். எனவே, மாதவிடாய் விடுப்பு என்பது உழைக்கும் பெண் எடுக்கும் உரிமையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.
– சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > செய்தி அறிக்கை > அரசியல் தமைமைக்குழு > உச்சநீதிமன்றத் தீர்ப்பு உயிரியல் யதார்த்தங்களை உணரவில்லை மாதவிடாய் விடுப்பு உரிமை உழைக்கும் பெண்களின் உரிமையே!
உச்சநீதிமன்றத் தீர்ப்பு உயிரியல் யதார்த்தங்களை உணரவில்லை மாதவிடாய் விடுப்பு உரிமை உழைக்கும் பெண்களின் உரிமையே!
15 March 2026138 views
posted on







