கேரள மாநில முன்னாள் முதல்வரும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் பினராய் விஜயன் இல்லத்தில் அமலாக்க துறையினர் சோதனை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது ஒன்றிய பிஜேபி அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து மத்திய அமைப்புகளை பயன்படுத்தும் பாஜகவின் நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்கும் இழிசெயலில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பிஜேபி அரசின் அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, மூத்த தலைவர் பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அசோக் தாவ்லே, விஜூ கிருஷ்ணன், மரியம் தாவ்லே உட்பட அகில இந்திய தலைவர்கள் பலரும் டெல்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையை கண்டித்து மாநிலம் முழுவதும் உடனடியாக கண்டன இயக்கங்களை நடத்துமாறு கட்சி அணிகளுக்கு மாநில செயற்குழு அறைகூவல் விடுக்கிறது.
(பெ. சண்முகம்)
மாநில செயலாளர்







