மேகதாது அருகே அணைகட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்தி, சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்எல்)லிபரேசன் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்.
மே 29 அன்று தஞ்சாவூரில் நடை பெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறும் இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.
இதுதொடர்பாக, இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செய லாளர் பெ. சண்முகம், இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்டு- லெனினிஸ்டு) லிப ரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத் தம்பி ஆகியோர் விடுத்துள்ள கூட்ட றிக்கை வருமாறு:
தமிழ்நாட்டின் உயிர்நாடியான காவிரி
தமிழ்நாட்டின் பாசனம் மற்றும் குடி நீர் ஆதாரத்தின் உயிர் நாடியாக காவிரி நதிநீர் அமைந்திருக்கிறது. காவிரி நதி நீர் பங்கீடு குறித்து 20-ஆம் நூற்றாண்டில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கர் நாடக அரசு, தன்னிச்சையாக நிராகரித்து வந்ததால், நீண்ட போராட்டத்திற்கு பிறகு நடுவர் மன்றம் அமைக்கப் பட்டது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பும், உச்சநீதிமன்றத்தின் மறு ஆய் வுக்கு உள்ளாக்கப்பட்டது. உச்ச நீதி மன்றத்தின் இறுதி தீர்ப்பின் படி, நீர் பங்கீட்டு அளவை கண்காணிக்க மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
கர்நாடக அரசின் தொடர் அத்துமீறல்
இதற்கிடையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை அறிவித்து, பணிகளையும் கர்நாடக அரசு தொடங்கியது. கர்நாடக மாநில அரசின் அத்துமீறல் நடவ டிக்கைக்கு தமிழ்நாடு விவசாயிகளும், தமிழ்நாடு அரசும் ஆரம்ப நிலையில் இருந்தே எதிர்ப்புத் தெரிவித்து வரு கின்றனர். தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றது.
உச்சநீதிமன்றத்தின் ஒருசார்பு தீர்ப்பு
இந்நிலையில், கர்நாடக அரசின் முறையீட்டை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், கடந்த 2025 நவம்பர் 13 அன்று “மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து நீர்வளத்துறையிடம் தாக்கல் செய்யலாம்” என தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் ஒரு சார்பு தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 2025 டிசம்பர் 2-ஆம் தேதி தஞ்சாவூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசும் டிசம்பர் 11 அன்று உச்ச நீதி மன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
டி.கே.சிவகுமாரின் ஆத்திரமூட்டும் பேச்சு
ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம் இந்த வழக்கில் அலட்சியம் காட்டி வந்த நிலையில், “ மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்த புதிய விரிவான திட்ட அறிக்கை விரைவில் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்” என கர்நாடக மாநில அரசின் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
“காவிரி நதியின் குறுக்கே மேக தாதுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டிற்கு எவ்வித உரிமையும் இல்லை” என ஆத்திரமூட்டும் வகை யிலும் பேசியுள்ளார்.
ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
எனவே, காவிரி நதிநீர் பங்கீடு, நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய வற்றின் இறுதித் தீர்ப்புக்கு எதிராக தொடர்ந்து பேசியும், செயல்பட்டும் வரு கிற கர்நாடக அரசையும், தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமையை பாதுகாப்பதில் அலட்சியம் காட்டி, வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசையும் கண்டித்து, மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு உறுதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, 29.05.2026 (வெள்ளிக் கிழமை) அன்று மாலை தஞ்சாவூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்டு- லெனினிஸ்டு) லிபரேசன் ஆகிய இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் பெருந் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனை வரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேராதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.







