செய்தி அறிக்கைமத்தியக் குழு

கியூபாவை நசுக்க முயலும் அமெரிக்கா; சிபிஐ(எம்) மத்தியக்குழு கடும் கண்டனம்!

11

கியூபாவை நசுக்க முயலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கியூபா தனித்து இல்லை என்றும், கியூபா விலிருந்து அமெரிக்கா விலக வேண்டும் என்றும் மத்தியக்குழு கூறியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மத்தியக்குழுக் கூட்டம் புதுதில்லியில் உள்ள ஹர்கிஷன்சிங் சுர்ஜித் பவனில் மே 22 அன்று துவங்கி 24-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்நிலையில், இக்கூட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

ரவுல் காஸ்ட்ரோ மீது சட்டவிரோதக் குற்றச்சாட்டு

கியூபப் புரட்சியின் வரலாற்றுத் தலைவரான ரால் காஸ்ட்ரோ ரூஸூக்கு எதிராக அமெரிக்க நீதித் துறை சமீபத்தில் அறிவித்துள்ள அதிர்ச்சியூட்டும் மற்றும் சட்டவிரோ தமான குற்றச்சாட்டை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

1996-இல் கியூபாவின் வான்வெ ளியில், மியாமியைத் தளமாகக் கொண்ட ‘சகோதரர்கள் மீட்புக்கு’ (Brothers to the Rescue) என்ற பயங்கரவாத அமைப்புக்குச் சொந்த மான சிறிய ரக விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் குறித்த பொய்கள் மற்றும் திரிபு களின் அடிப்படையிலேயே அமெரிக்க நீதித்துறையால் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டுள்ளன.

அமெரிக்காவின் வஞ்சக அரசியல் நகர்வு

கியூபப் புரட்சியின் மிகவும் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவ ரான, 94 வயதான ரால் காஸ்ட்ரோ வுக்கு எதிராக, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த வழக்கை அமெரிக்க நீதித்துறை இப்போது மீண்டும் செயல்படுத்து கிறது. இது எந்தவொரு சட்ட அடிப்படையுமற்ற ஒரு வஞ்சகமான அரசியல் நகர்வு. சமீபத்திய பொருளாதாரத் தடை யின் தீவிரத்தால் ஏற்பட்ட பெரும் துன்பங்களுக்கு மத்தியிலும், தங்கள் புரட்சியைப் பாதுகாப்ப தற்காக ஒன்று திரண்டுள்ள கியூப மக்களின் மன உறுதியை உடைப்ப தற்கு ஏகாதிபத்தியத்தால் இயலா ததன் விளைவாகவே, இந்த வஞ்சக அரசியல் நகர்வு என்பது தெளிவா கிறது.

கியூப மக்களின் உறுதியை குலைக்க முடியாது!

ஏகாதிபத்தியம் இப்போது அந்தத் தீவில் ஒரு ராணுவத் தலை யீட்டைச் செய்ய விரும்புகிறது, இது ஒரு மனிதாபிமானப் பேரழிவுக்கு வழி வகுக்கும், ஏனெனில் கியூபர்கள் தங்கள் நாட்டை எந்த விலை கொடுத்தும் பாதுகாப்பார்கள். அமெரிக்க ஜனாதிபதி டொனா ல்டு டிரம்ப், மே 21 அன்று, ‘கியூபா மனதில் உள்ளது’ என்றும், அந்தத் தீவைத் தாக்கத் திட்டமிட்டுள்ள தாகவும் அறிவித்துள்ளார். கியூபா வில் உள்ள சோசலிச அமைப்புக்கு எதிராக, தாம் இருப்பதாகவும், அத னால் அங்கு ஸ்திரத்தன்மையைக் குலைத்து ஆட்சி மாற்றத்தை அமல்படுத்துவதில் ஆர்வமாக இருப்பதாகவும் அமெரிக்கா வெளிப்படையாகக் கூறுகிறது.

கியூப மக்களோடு ஒன்றுபட்டு நிற்கிறோம்

கியூபா மீதான அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் அச்சுறுத்தல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மிக வும் சவாலான காலங்களில் உறுதி யுடனும் ஒற்றுமையுடனும் இருந்த கியூப மக்களுக்கும், கியூப புரட்சி யின் தலைமைக்கும் நாங்கள் மீண்டும் ஒருமுறை உறுதியான ஒற்றுமையுடன் நிற்கிறோம்.

முன்னாள் ஜனாதிபதியும், கியூபா புரட்சியின் வரலாற்றுத் தலை வருமான ரால் காஸ்ட்ரோவுக்கு இழைக்கப்பட்ட இந்த அவம திப்புக்கும், கியூபா மீது தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கும் இந்திய மக்கள் தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply