செய்தி அறிக்கை

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் 16.05.2026 அன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ(எம்) பங்கேற்பு!!

11

ஏழை, எளிய, மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை தமிழகத்தில் முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு ஜனநாயக அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன.  சமீபத்தில் கூட இத்தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று பல லட்சக்கணக்கான மாணவர்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.   நீட் தேர்வை நாடு முழுவதும் ரத்து செய்ய வேண்டும், மருத்துவ படிப்புக்கான தேர்வுமுறையை முன்புபோல் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடமே ஒப்படைக்க வேண்டும் என வலுவான குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், நீட் தேர்வை இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் 16.05.2026 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெறுகிறது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆதரவு தெரிவிப்பதுடன், மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், தோழர்கள் கலந்து கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது.

(பெ. சண்முகம்)

மாநில செயலாளர்

Leave a Reply