செய்தி அறிக்கைதீர்மானங்கள்மத்தியக் குழு

அதானி தில்லுமுல்லு: விசாரணை நடத்துக!

அதானி குழுமத்திற்கு எதிராக, ஹிண்டன்பர்க் ஆய்வு மையத்தால் வெளி யிடப்பட்டுள்ள புகார்கள் மீது உச்சநீதிமன்றத்தின் மூலம் நாள்தோறும் மேற்பார்வையுடன் கூடிய ஓர் உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த விசாரணை முடிவடையும் வரையில், இதன் உண்மை வெளிச்சத் ற்கு வரும் வரையில், இந்தியாவின் நலன்களும், இந்திய மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அதானியின் கம்பெனிகளில் எல்ஐசி நிறுவனம் சார்பில் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தக் கம்பெனிகளால் பெறப்பட்டுள்ள கடன்களில் 40 விழுக்காடு பாரத ஸ்டேட் வங்கியின் மூலமாக பல  தேசிய வங்கிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளன.

எல்ஐசி-யும், பாரத ஸ்டேட் வங்கியும், கோடானுகோடி இந்திய மக்கள் தங்கள் எதிர்காலத்திற்காக வாழ்நாள் முழுவதும் சேமித்த தொகைகளைக் கொண்டவையாகும். 

அதானி குழுமத்தின் தில்லுமுல்லுகள் குறித்து செய்திகள் வெளிவந்ததைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் சுமார் 50 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக மேற்கண்ட பொதுத்துறை நிறுவனங்களில் தங்கள் வாழ்நாள் சேமிப்புகளை டெபாசிட் செய்து வைத்துள்ள மக்கள் முழுமையாக நாசமாகிவிட அனுமதித்திட முடியாது.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இதர மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து  இப்பிரச்சனையை எழுப்பிடும்.