இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு கூட்டம் நவம்பர் 20,21, 2023 தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் ஏற்கனவே இரண்டு சிப்காட் வளாகங்கள் இயங்கி வரும் சூழ்நிலையில் மூன்றாவதாக ஒரு சிப்காட் வளாகத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையினை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. தங்களது நிலம் கையப்படுத்துவதை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது அதிகாரிகள் வழக்குப் போட்டுள்ளதுடன் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டனத்திற்குரியதாகும். அதிகாரிகளின் தவறான நடவடிக்கை மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்கு வந்தவுடன் விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் திரும்பப்பெறப்பட்டுள்ளது ஆறுதல் அளிக்கும் நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையை வரவேற்பதோடு ஒருங்கிணைப்பாளர் அருள் மீதான குண்டர் சட்டத்தையும், விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.
மேலும், அரசு தேவைக்கு நிலம் கையகப்படுத்தும் நிகழ்வுகளில் விவசாயிகளுடைய முழுமையான ஒப்புதல் அடிப்படையில் மட்டுமே நிலங்களை கையகப்படுத்திட வேண்டுமெனவும், விவசாயிகளை வழக்கு போட்டு அச்சுறுத்தி கையகப்படுத்தும் போக்கினை எதிர்காலத்தில் தொடரக் கூடாது எனவும் சிபிஐ (எம்) மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > தீர்மானங்கள் > மாநிலக் குழு > தீர்மானம் – 2 செய்யார் அருள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்பப் பெறுக!
தீர்மானம் – 2 செய்யார் அருள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்பப் பெறுக!
23 November 2023156 views
posted on