கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் இன்று (10.06.2024) திறக்கப்படவுள்ளன. விடுமுறையை முடித்து பள்ளிகளுக்குச் செல்லும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் பாராட்டை தெரிவித்துக் கொள்வதோடு, கல்வியில் மென்மேலும் சிறந்து விளங்கி முன்னேற்றமடைய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நீண்ட விடுமுறைக்கு பிறகு திறக்கப்படும் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், பள்ளிப்பேருந்துகள் உள்ளிட்டவை அனைத்தும் விதிகளின் படி முறையாக பராமரிக்கப்படுவதையும், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பயணம் மேற்கொள்ளும் வகையில் கூடுதலான பேருந்துகள் இயக்கப்படுவதையும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்திடவும், உரிய காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பாடநூல்கள் வழங்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்