24 வது மாநில மாநாடுசெய்தி அறிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் 24வது தமிழ்நாடு மாநில மாநாடு! 2025 ஜனவரி 3, 4, 5 தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெறுகிறது!

Cpim Copy

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மத்தியக்குழு கூட்டம் கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கட்சியின் கிளை மாநாடுகள் துவங்கி இடைக்கமிட்டி மாநாடுகள், மாவட்டக்குழு மாநாடுகள், மாநில மாநாடுகள் அதனைத் தொடர்ந்து அகில இந்திய மாநாட்டை நடத்துவது என கட்சியின் மத்தியக்குழு முடிவு செய்திருந்தது.

அதன் அடிப்படையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் 24வது தமிழ்நாடு மாநில மாநாடு 2025 ஜனவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலிமிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். மாநாட்டின் முதல் நாளான ஜனவரி 3 ஆம் தேதி அன்று மாலை விழுப்புரத்தில் பிரம்மாண்டமான செம்படை பேரணியும், அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெறும்.

2025 ஜனவரி 4, 5 தேதிகளில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் மாநில செயலாளர் வேலை அறிக்கையை முன்வைத்து உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து அறிக்கையின் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் செய்யப்பட்ட கட்சியின் தலையீடுகள், நடத்தியுள்ள போராட்டங்கள், அரசியல் நிலைபாடுகள், ஜனநாயகப்பூர்வமாக விவாதிக்கப்பட்டு எதிர்வரும் காலத்திற்கான கடமைகள் வரையறுக்கப்பட உள்ளது.

(கே.பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்