தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் மேனாள் பதிவாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எழுத்தறிவு இயக்கத்தின் முன்னோடி முனைவர் அ.வள்ளிநாயகம் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
முனைவர் அ.வள்ளிநாயகம் அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில தலைவராக பல்லாண்டு காலம் பணியாற்றியவர். துளிர் இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்து, கடந்த 25 ஆண்டுகளாக நடந்துவரும் துளிர் திறனறிதல் தேர்வை துவங்கியவர். எழுத்தாளர், ஆய்வாளர்; மொழி பெயர்ப்பாளர்; களப்பணியாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். அறிவியல் இயக்கத்தில் குடும்பத்துடன் பங்கேற்று முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.
அவரது இழப்பால் வாடும் அவரது மகள்கள் அம்பிகா, கலா மற்றும் குடும்பத்தினர், முற்போக்கு அறிவியல் இயக்கத்தார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர்