மாநில செயற்குழு

அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷாவே பதவி விலகு!10 மாநகரங்களில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!!!

Amtisha

சி.பி.எம், சி.பி.ஐ மற்றும் சி.பி.ஐ (எம்.எல்) கட்சிகள் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் கூட்டு கூட்டம் டில்லியில் நடந்துள்ளது. அதில், ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. அண்மையில் ராஜ்ய சபாவில், அரசியல் சாசன சட்டத்தின் 75ம் ஆண்டு விழா கொண்டாட்டம் மீதான விவாதத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்ணல் அம்பேத்கர் அவர்களை அவமதிக்கும் வகையிலும், இழிவு செய்யும் வகையில் பேசியதற்கு எதிராக எல்லாத் தரப்பினரும் தன்னெழுச்சியுடன் போராடி வருகின்றனர். இடதுசாரி கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது. அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என இடதுசாரி கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே, தமிழ்நாட்டில் மாநகர, நகரங்களிலும் பல கட்ட ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ள சூழ்நிலையில் அகில இந்திய அறைகூவல் என்கிற அடிப்படையில் 1. மதுரை, 2. திண்டுக்கல், 3. திருச்சி, 4. தஞ்சாவூர், 5. நாகப்பட்டினம், 6. திருநெல்வேலி, 7. கோவை, 8. சேலம், 9. தூத்துக்குடி, 10. ஈரோடு ஆகிய 10 மாநகரங்களில்  இடதுசாரி கட்சிகளின் சார்பில் வரும் டிசம்பர் 30 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என  முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக சக்திகளும், பொதுமக்களுக்கும் பேராதரவு அளிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

(கே. பாலகிருஷ்ணன்)   (இரா. முத்தரசன்)                 (பழ. ஆசைத்தம்பி)

மாநில செயலாளர்           மாநில செயலாளர்           மாநில செயலாளர்

சிபிஐ (எம்)                                   சிபிஐ                   சிபிஐ (எம்.எல்.)லிபரேசன்

Leave a Reply