இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், விடுதலை போராட்ட வீரரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியவரும், பண்ணை அடிமைத் தனத்தை எதிர்த்து போராடியவருமான தோழர் பி.எஸ்.ஆர். என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் பி.சீனிவாசராவ் அவர்களின் மகன் எஸ்.ராஜசேகர் (69) உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று (17.03.2025) காலை காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம். அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.