மாநில செயற்குழு

தோழர் காரல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்பு! முதலமைச்சருக்கு நன்றி!

Cpim poster

மார்க்சிய தத்துவ மேதை தோழர் காரல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அந்த கோரிக்கையை ஏற்று இன்று (3.4.2025) தோழர் காரல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை வைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

இந்த அறிவிப்பை மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினையும், பாராட்டுக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.

(பெ. சண்முகம்) மாநில செயலாளர்

Leave a Reply