இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் பொதுச் செயலாளர் நம்பாலா கேசவராவ் உள்ளிட்ட 27 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கடுமையாகக் கண்டிக்கிறது.
மாவோயிஸ்டுகள் விடுத்த நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக் கோரிக்கைகளைப் புறக்கணித்து, மத்திய அரசும் பாஜக-தலைமையிலான சத்தீஸ்கர் மாநில அரசும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முனையாமல், கொலை மற்றும் அழிவு போன்ற மனிதாபிமானமற்ற கொடூரக் கொள்கையைப் பின்பற்றி வருகின்றன.
மாவோயிஸ்டுகளை ஒழிக்க கடைசி நாள் வரைறுப்பு விதிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதும், “பேச்சுவார்த்தைக்கு தேவையில்லை” என சத்தீஸ்கர் முதலமைச்சர் கூறியதும், மனித உயிர்களின் மரணத்தை வெறித்தனமாக கொண்டாடும் பாசிச மனோபாவத்தையும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்பாடுகளையும் வெளிப்படுத்துகின்றன.
பல அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் அரசை பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாவோயிஸ்டுகளின் கொள்கைகளுக்கு நாம் எதிராக இருந்தாலும், அவர்களின் பேச்சுவார்த்தைக் கோரிக்கையை உடனடியாக ஏற்று, துணை இராணுவப் படைகளின் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.