ஆந்திரப் பிரதேச உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்யும் உச்சநீதிமன்றத்தின் உத்த ரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தனது ஏற்பின்மையை உறுதியான முறையில் தெரிவித்துக் கொள்கிறது. ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, அந்த மதத்தைப் பின்பற்றி செயல்படும் பட்சத்தில், அவரைப் பட்டியலினத்தைச் சேர்ந்தவராகக் கருத முடியாது என்ற தீர்ப்புடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடன்படவில்லை.
பட்டியலின சமூகத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்கள், அந்தச் சமூகங்களின் சமூக – பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டவை என்பதில் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது. ஆனால், தற்போதைய தீர்ப்பானது சமூக – பொருளாதாரக் காரணிகளை விட, சம்பந்தப்பட்ட குழுவினரின் மத அடையாளத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது. எனவே, இந்த உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படை நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது. எனவே, இந்த உத்தரவை, மறு பரிசீலனை செய்யும் வகையில், அரசியலமைப்பு அமர்வு விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது







