சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

தீர்மானம் – 4 நாடாளுமன்ற ஜனநாயகத்தைகேலிக்கூத்தாக்கும் பாஜக அரசு சிபிஐ (எம்) மாநிலக்குழு கண்டனம்

நாடாளுமன்ற ஜனநாயகத்தை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. சுகுமாறன் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலில் 2023 ஆகஸ்ட் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் உரிய விவாதம் இல்லாமல் பல்வேறு மசோதாக்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்மொழிந்து வருகிறது. அதுவும் இந்தி மொழியில் அதை திட்டமிட்டு செய்து வருகிறது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்திற்குள்ளேயும், வெளியேயும் ஆட்சேபிக்கிறது, வன்மையாக கண்டிக்கிறது.

            அண்மையில் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகியவற்றிற்கு மாற்றாக பாரதீய நயா சன்ஹிதா என்ற பெயரில் இந்தி திணிப்பை செய்யும் வகையில் மசோதா என முன் மொழிந்து நிலைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது பாஜகவின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றக் கூடியதாக இருக்கும் என்ற அச்சம் தவிர்க்க முடியாதது.

            அதேபோல், மும்மொழி திட்டத்தை மீண்டும் அமலாக்கும் வகையிலும், 8வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 22 மொழிகளுக்கான அங்கீகாரத்தை பாஜக தொடர்ந்து தகர்க்கும் வகையிலும், இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்பதற்கான வகையிலும் செயல்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது.  ஆகஸ்ட் 4 அன்று முன்மொழிந்து சட்டமாக்கியது இந்தியா இதுவரை பின்பற்றி வரும் மொழிக் கொள்கை மற்றும் பண்பாட்டு நடைமுறைகளுக்கு எதிரானதாகும்.

            எனவே பாஜக ஆட்சியை வீழ்த்துவதன் மூலமும், பாஜக கட்சியையும் அதன் சித்தாந்தத்தையும் முறியடிப்பதன் மூலம் மட்டுமே மாநில மொழிகள், பண்பாடு ஆகியவற்றை காப்பாற்ற முடியும். இதற்கு தமிழக ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு வலுவான போராட்டத்தை முன்னெடுக்க முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது. 
கே. பாலகிருஷ்ணன்) 
மாநில செயலாளர்