சட்டமன்றம்மாநிலக் குழு

தமிழ்நாடு 17வது சட்டப்பேரவை தேர்தல்-2026: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை

Election Manifesto copy

தமிழ்நாடு 17வது சட்டப்பேரவை தேர்தல்-2026 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தேர்தல் அறிக்கை

1. தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள்

ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள 17 ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெறும் வகையில் தமிழக மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்கிற வேண்டுகோளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முன்வைக்கிறது.

“தூங்காது கண் தூங்காது
இருள் சூழும் உலகில்
பொதுவாழ்வு தோன்றும் வரை
தூங்காது கண் தூங்காது”

என்ற மக்கள் கவி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் கவித்துவம் மிக்க வரிகளுக்கு ஏற்ப இயங்கி வரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), கடந்த ஐந்து ஆண்டுகளில் உலக நிலைமைகள் முதல் உள்ளூர் நிலைமைகள் வரை ஆழ்ந்து கவனித்து, உழைக்கும் மக்களின் நலன் காக்க இடையறாது போராடி வருகிறது.

அனைத்துப் பகுதி மக்களுக்கும் எதிரான கார்ப்பரேட் ஆதரவு –  மதவெறி அரசைத் தலைமை தாங்கி நடத்தி வரும் பாஜக மற்றும் அதற்கு வழி காட்டும் ஆர் எஸ் எஸ் மற்றும் அவற்றின் பரிவாரங்களின் அராஜகங்களைத் தட்டிக் கேட்பதில் சிபிஐ(எம்) முக்கிய பங்கு வகிக்கிறது.

மகாகவி பாரதியின்

“மேலவர் கீழவர் என்றே – வெறும்
வேடத்தினில் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியை யெல்லாம் இன்று
பொசுக்கி விட்டால் எவர்க்கும்
நன்மையுண்டாம்”

என்கிற வரிகளுக்கு ஏற்ப வர்ணாசிரம கோட்பாடுகளுக்கு எதிராகவும், சாதிய பாலின ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திலும் முன்வரிசை களப்போராளியாக திகழ்கிறது. நவீன தாராளமய எதிர்ப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, அறிவியல் கண்ணோட்டம், தாய்மொழி வளர்ச்சி போன்றவற்றிற்காக சமரசமின்றி குரல் கொடுத்து வருகிறது. மக்கள் ஒற்றுமை பாதுகாப்பிற்கான விரிந்த திரட்டலை செய்வதிலும் முன்னின்றுள்ளது.

தொழில் வளர்ச்சி, பாதுகாப்பு போன்ற கருத்தாக்கங்கள் தொழிலாளர் வளர்ச்சி,  பாதுகாப்புடன் இணைந்தது என்பதை உரக்கச் சொல்கிறது. நாட்டின் முன்னேற்றம் விவசாயிகள், விவசாய தொழிலாளிகளின் முன்னேற்றத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறது. பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சிறு குறு நடுத்தர தொழில் துறையை வாழ வைப்பதற்கான, தமிழ்நாட்டின் தொழில் நகரங்களை பாதுகாப்பதற்கான கோரிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தனியார் மயம், பங்கு விற்பனை, கேந்திர விற்பனை, பணமாக்கல் போன்ற பல்வேறு பெயர்களில் உருவாக்கப்படும் அபாயங்களில் இருந்துதேசத்தின் சுயசார்பிற்கு அடித்தளமாக திகழும் பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாப்பதில் சமரசமின்றி போராடி வருகிறது. இந்திய இறையாண்மையை, நலனை, இந்தியத் தொழில்களை, வேலைவாய்ப்புகளை காவு கேட்கக் கூடிய அந்நிய முதலீடுகளுக்கு எதிராகவும் சி.பி.ஐ (எம்) நடத்தி வரும் போராட்டம் குறிப்பிடத்தக்கது.

அரசு ஊழியர், ஆசிரியர் உள்ளிட்ட நடுத்தர வர்க்க ஊழியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட போராடி வருகிறது. மத்திய மாநில அரசாங்கத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதோடு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் குரல் கொடுத்து வருகிறது.

கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும், அவரவர் தொகுதி சார்ந்த பிரச்சனைகளுடன் தமிழகம் முழுவதும் இக்காலத்தில் முன்னுக்கு வந்த உழைப்பாளி மக்களின் பிரச்சனைகளை வலுவாக சட்டப் பேரவையில்  எழுப்பியுள்ளனர். ஒடுக்கப்பட்டவர்களின் குரலை ஒலித்திருக்கின்றனர். மார்க்சிஸ்ட் கட்சி சட்டப்பேரவையில் கூடுதலாக இடம்பெற வேண்டிய அவசியத்தை இது உணர்த்துகிறது.

ஒன்றிய பாஜக அரசாங்கம் மக்களின் மத நம்பிக்கையைக் குறுகிய அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்தி, தலித், பழங்குடி, சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்ட பகுதியினர் மீது பல்முனை தாக்குதல் தொடுப்பதுடன், தொழிலாளி விவசாயி உள்ளிட்ட உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும் வாழ்வுரிமையின் மீதும் போர் தொடுக்கிறது. தொழிலாளர் விரோத தொகுப்பு சட்டங்கள், ஊரக வேலை உறுதி சட்டத்தை அடியோடு சிதைத்தது, விதைச்சட்டம்,  மின்சார திருத்த மசோதா உள்ளிட்டவை இதன் சமீபத்திய உதாரணங்கள். உணவுப்பொருட்கள் உட்பட  ஜி.எஸ்.டி. வரி, பெட்ரோலிய பொருட்கள் மீது கடும்வரிகள் போன்றவற்றின் விளைவாக வரலாறு காணாத விலை உயர்வு என்ற முறையில் சுமைகள் மக்களின் மேல் ஏற்றப்படுகின்றன.

2014 துவங்கி தற்போது வரை விவசாயி, விவசாயத் தொழிலாளி,  புலம்பெயர் தொழிலாளி,  கூலித்  தொழிலாளி உள்ளிட்ட 5 லட்சம் பேர் நாடு முழுக்க தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையிலும் கூட, விவசாயிகளின் கடன் தள்ளுபடி,  எம் எஸ் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலை, அதற்கு அடிப்படையாக  சட்டம் இயற்றுதல் போன்றவற்றை  ஒன்றிய பாஜக அரசு மறுத்து வருகிறது.

மேலும் மனித குல எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சாய்மானமாக இந்தியாவின் வெளியுறவு கொள்கையின் பாதையை மாற்றி வருகிறது. இன அழிப்பில் ஊறித் திளைக்கும் இஸ்ரேலுடன் கைகோர்த்து நிற்கிறது. இஸ்ரேலின் கொலைவெறி ஆட்டத்திற்கு ஆதரவாக ஆயுதங்களை உற்பத்தி செய்து அனுப்பி வருகிறது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்கிற பெயரில் இந்தியாவின் இறையாண்மைக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிப்பது, சமூக செயல்பாட்டாளர்களுக்கு எதிராக அடக்குமுறை சட்டங்களைப் பயன்படுத்துவது, அரசமைப்பு சட்டத்தின் கீழ் சுயேச்சையாக செயல்படும் அமைப்புகளை சிதைப்பது, எதிர்க்கட்சித் தலைவர்களை வேட்டையாட ஒன்றிய அரசின் முகமைகளைத் தவறாகப் பயன்படுத்துவது, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கிற பெயரில் வாக்குரிமைக்கு வேட்டு வைப்பது – குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்குவது, தகவல் தொழில்நுட்ப சட்டங்களைத் திருத்தி மக்களை- எதிர்க்கட்சிகளைக் கண்காணிக்கும் அரசாக (ளரசஎநடைடயnஉந ளவயவந)  உருவாகி வருவது போன்ற  நவ பாசிச போக்குகளை வெளிப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக,  கூட்டணி தர்மம் என்கிற பெயரில் பாஜகவின் மேற்கூறிய படுமோசமான மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்க மறுத்து மௌனம் காக்கிறது அல்லது ஆதரிக்கிறது. சிலவற்றுக்கே, அதுவும்  பெயரளவில் மாற்றுக் கருத்தை முன்வைக்கிறது. குறிப்பாக எஸ் ஐ ஆர், தொழிலாளர் விரோத தொகுப்பு சட்டங்கள், 3 வேளாண் சட்டங்கள்,  விதை சட்டம், விபி கிராம் ஜி சட்டம் போன்ற கொடூர நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிறது. தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்படுவதை  வேடிக்கை பார்க்கிறது. மதவெறி வெறுப்பு அரசியல் தமிழகத்தில் ஊடாட இடமளிக்கிறது. இக்கால கட்டத்தில் பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவதில் படுதோல்வி அடைந்திருக்கிறது.

உழைக்கும் மக்களின் உரிமைகள், சாதிய பாலின ஒடுக்குமுறை எதிர்ப்பு,  பகுத்தறிவு, சுயமரியாதை,  சமூக நீதி,  மாநில உரிமைகள், மதச்சார்பின்மை போன்றவற்றுக்குக் குரல் கொடுக்கும் பாரம்பரியம் தமிழகத்துக்கு உண்டு. இது நிலைக்குமா நீடிக்குமா என்பதுதான் தேர்தல் நமக்கு முன் வைக்கும் பிரதான கேள்வி.

இத்தருணத்தில் தமிழகத்தின் உரிமைகளையும் மக்களின் நலனையும் பாதுகாப்பதே முக்கிய கடமையாக மேலோங்கி நிற்கிறது. அடிப்படை விழுமியங்கள் சிதைவு, இந்திய குடியரசின் குணாம்சத்தை மாற்றி அமைப்பதற்கான முயற்சி,  கோட்பாடு அற்ற அரசியல்,  எளிய மக்களின் நலனை உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளின் லாப வெறிக்காக விட்டுக் கொடுப்பது, “உயர்” சாதிய பிராமணியக் கருத்தியல் மீது கட்டமைக்கப்படும் இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதற்கான முயற்சி போன்ற ஆபத்தான  நடவடிக்கைகளைத் தமிழக மண்ணில் இடம் பெற வைக்க துடிக்கும் அதிமுக பாஜக கூட்டணியை முறியடிப்பதும், இந்த ஆபத்தை உணர மறுத்து சுயநல அரசியலை முன்வைக்கும் இதரக் கட்சிகளை நிராகரிப்பதும் இன்றைய தேவை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் இடம்பெற்றுள்ள திமுக தலைமையிலான கூட்டணியை  வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன், சிபிஐ(எம்) தம்  தேர்தல் அறிக்கையை மக்கள் முன் சமர்ப்பிக்கிறது.

இத்தேர்தல் அறிக்கையினை தயாரித்த குழுவின் தலைவர் தோழர் உ. வாசுகி  மற்றும் தோழர்கள் என். குணசேகரன், ஜி. சுகுமாறன்,  டி. ரவீந்திரன்,  செ. முத்துக்கண்ணன், க. சுவாமிநாதன்  ஆகியோருக்கு கட்சியின் மாநில செயற்குழு  பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

இங்ஙனம்,
சென்னை  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
04.04.2026 தமிழ்நாடு மாநிலக்குழு

2. தேர்தல் சீர்திருத்தம்

•             ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தனது திட்டத்தின் மூலம் ஒற்றை ஆட்சியை நோக்கி வேகமெடுக்கிறது ஒன்றிய பாஜக அரசு. இந்த நேரத்தில், பிற்போக்கான அதன் செயல்திட்டத்தைத் தடுக்க உழைப்பதுடன், மக்களாட்சியை வலுப்படுத்தும் மெய்யான சீர்திருத்தங்களை முன்வைப்போம்.

•             ‘ஒரு வாக்கு ஒரு மதிப்பு’ என்ற நிலைமை அரசியல் தளத்தில் உறுதி செய்யப்பட்டாலும் – வெற்றியடைந்தவரைத் தவிர மற்றவர்களுக்கான வாக்குகள் மதிப்பு இழப்பதே இன்றைய தேர்தல் நடைமுறையாகும். அதனை மாற்றி, அனைத்து வாக்குகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் உரிய முறையில் ‘விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை’ அமல்படுத்திட வலியுறுத்துவோம்.

•             தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கும், வாக்காளர் பட்டியல் ‘சிறப்பு தீவிர திருத்தத்தை’ (எஸ்.ஐ.ஆர்) ரத்து செய்ய குரல் கொடுப்போம்.

•             அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நன்கொடை வாங்குவதைத் தடை செய்ய வலியுறுத்துவோம்.

•             தேர்தல் ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் பண ஆதிக்கமும், கார்ப்பரேட் ஆதிக்கமும் முற்றாக ஒழிக்கப்பட்டு ஜனநாயக அடிப்படையில் மக்கள் வாக்களிக்கும் முன்னெடுப்புகளை மேற்கொள்வோம்.   

3. மாநில உரிமைகள்

•             மாநில உரிமைகள் என்பது வெறும் அதிகாரப் பகிர்வு மட்டுமல்ல, அதுவே உண்மையான கூட்டாட்சி என்ற நோக்குடன் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக மார்க்சிஸ்ட் கட்சி பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்துள்ளது.

•             இக்காலக்கட்டத்தில் பாஜக அரசு தொடர்ச்சியாக மாநில உரிமைகள் மீது தாக்குதல்களை தொடுத்துள்ளது. அவற்றை எதிர்ப்பதோடு, மத்திய-மாநில உறவுகளைச் சீரமைத்து மாநிலங்கள் உரிய அதிகாரங்களோடும், உரிமைகளோடும் செயல்பட மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து முயற்சிக்கும்.

•             தொகுதி மறுவரையறை என்ற பெயரால் தென்மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களைக் குறைக்கும் திட்டத்தை எதிர்த்து – தற்போதுள்ள விகிதாச்சாரத்தைப் பாதுகாக்க முன்னிற்போம்.

•             நிதிப் பகிர்வில் மாநிலத்தின் உரிமையை நிலைநாட்ட தொடர்ந்து குரலெழுப்புவோம்.

•             ஆளுநர் பதவி தேவையற்றது. எனினும், ஆளுநரை நியமிக்க வேண்டுமெனில் மாநில அரசைக் கலந்தாலோசித்து பொருத்தமானவரை தெரிவு செய்ய வேண்டும். மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்.

•             சட்டமன்றத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது, பல்கலைக்கழகங்களில் ஆளுநர் வேந்தராக இருப்பது  போன்ற தேவையற்ற நடைமுறைகளைக் கைவிட வலியுறுத்துவோம்.

•             சுற்றுச்சூழல், மின்சாரம், வனத்துறை, காவல்துறை போன்றவற்றில் மாநில அரசுகளின் முடிவெடுக்கும் அதிகாரத்தை குறைக்கும் ஒன்றிய அரசின் சட்டங்களை எதிர்ப்போம்.

•             மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளில் ஒன்றிய அரசு தலையிடுவதை தடுக்கவும், ஒத்திசைவு பட்டியலில் உள்ள துறைகளில் மாநில அரசுடன் கலந்து பேசாமல் தன்னிச்சையாக முடிவெடுப்பதை தடுக்கவும் வலியுறுத்துவோம்.

•             ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வித் துறையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வலியுறுத்துவோம்.

•             மாநிலங்களை உள்ளடக்கிய கவுன்சில் அமைப்பினை செயல்படுத்த வலியுறுத்துவோம். நிதி ஆயோக் அமைப்பிற்கு மாறாக, தேசிய திட்ட ஆணையத்தை மீண்டும் கொண்டுவர வலியுறுத்துவதுவோம். நிதிக் குழு, ஜி.எஸ்.டி. கவுன்சில் போன்ற அமைப்புகளில் மாநிலங்களுக்கு உரிய முக்கியத்துவம் கோருவோம்.

4. தமிழ் மொழி வளர்ச்சி

•             தமிழ் ஆட்சி மொழி சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு, நீதி, நிர்வாகம், கல்வி என அனைத்து துறைகளிலும் தமிழ் முழுமையாக ஆட்சி மொழியாக இருப்பதை உறுதி செய்வோம்.

•             ஒன்றிய அரசின் இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை முற்றிலுமாக எதிர்த்து நிற்போம். அரசியல் சட்டத்தின் 8வது  அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் ஒன்றிய அலுவல் மொழியாக்க வலியுறுத்துவோம். இந்த நிலை எட்டப்படும் வரை ஆங்கிலம் ஒரு தொடர்பு மொழியாக பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்வோம். அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் சமமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வலியுறுத்துவோம்.

•             மருத்துவம், பொறியியல் உட்பட உயர்கல்வி வரை தாய்மொழியில் பயின்றிட வகை செய்வோம். தமிழ்நாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அனைத்திலும் தமிழ் மொழிப்பாடமாக இருப்பதையும், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதையும், இதனைக் கண்காணிக்கும் உரிமையை தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக பெறவும் வலியுறுத்துவோம்.

••           தமிழகத்தில் தமிழ் வழியில் பயின்றோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க வலியுறுத்துவோம். தமிழ்நாட்டில் மாநில அரசு பணிகளில் சேர தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அந்தந்த மாநிலங்களில் ஒன்றிய அரசு பணிகளிலும் அந்தந்த மாநில மொழியில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.

•             உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் தமிழ் ஆய்வுக்கான இருக்கைகள் அமைக்கப் பெறுவதையும், சாகித்ய அகாடமி உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றிய அரசின் தலையீடு இன்றி  சுதந்திரமாக செயல்படுவதையும் உறுதிபடுத்த வலியுறுத்துவோம்.

•             தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகங்களுக்கு நிகரான கட்டமைப்பு வசதிகளோடு மேம்படுத்துவதோடு சர்வதேச அளவிலான மொழியியல் ஆய்வுகள் நடைபெறும் மையமாக மாற்றவும், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற மொழி சார்ந்த ஆய்வு நூல்களை எளிய விலையில் மக்கள் பதிப்பாக கொண்டு வரவும் வலியுறுத்துவோம்.

•             அரசு திட்டங்களுக்காக பரப்புரை மேற்கொள்ளும் நாடகக் குழுக்கள், கலைக்குழுக்களது உறுப்பினர்களுக்கு ‘அரசு அடையாள அட்டை’ வழங்கிட வற்புறுத்துவோம்.

5. பண்பாடு

•             ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என ஒற்றைத் தன்மையை நிர்ப்பந்தமாக திணித்து இந்தியாவின் பன்முக பண்பாட்டை அழித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. இதற்கு மாறாக அனைத்து நிலைகளிலும் பன்முக பண்பாட்டைப் பாதுகாக்க குரல் கொடுப்போம்.

•             அனைத்து தேசிய இனங்களின் உரிமைகள் மற்றும் தனித்துவ அடையாளங்களைப் பாதுகாக்க வலியுறுத்துவோம். இதன் மூலம் இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவோம்.

•             தமிழகத்தில் பரவலாக நிலவும் பன்மைத்துவ பண்பாட்டை வலுப்படுத்துவதுடன், மதநல்லிணக்கச் செயல்பாடுகளை அரசே வலுப்படுத்தும் வகையில் சமத்துவ பொங்கல் போன்ற அரசின் முன்னெடுப்புகளை அதிகரிக்கச் செய்வோம்.

•             தமிழில் அர்ச்சனை என்பது பெயரளவுக்கு இருப்பதை மாற்றி பரவலாக்கவும், குடமுழுக்கு உள்ளிட்ட வழிபாட்டு நிகழ்வுகள் தமிழில் நடத்தப்படுவதை உறுதி செய்யவும் குரல் கொடுப்போம்.

•             தமிழில் புழக்கத்தில் இருக்கும் சாதி சார்ந்த சொற்கள் மற்றும் உழைக்கும் மக்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநர்களை இழிவுப்படுத்தக் கூடிய சொற்களை முற்றாக தவிர்க்கவும், அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய கலை சொற்களை உருவாக்க தமிழ் கலைக்களஞ்சிய அறிஞர் குழு அமைக்கப்படுவதோடு அது ஒரு தொடர் செயல்பாடாக அமைந்திட வலியுறுத்துவோம்.

6. அகழ்வாய்வு

•             தமிழ்நாட்டில் தொல் எச்சங்கள் கிடைத்துள்ள அனைத்து இடங்களிலும் ஒன்றிய மற்றும் மாநில அகழ்வாய்வுத்துறைகள் மூலம் முழுமையான அகழ்வாய்வுகள் நடைபெற வலியுறுத்துவோம்.

•             கீழடியில் ஒன்றிய அகழ்வாய்வுத்துறை மேற்கொண்ட அகழ்வாய்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும். அதேபோன்று, ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகளும் உடனடியாக வெளியிடப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். சிந்து சமவெளி நாகரீகத்திற்கும், கீழடி நாகரீகத்திற்கும் இடையிலான தொடர்பை அறிய தொல்லியல் அறிஞர்கள் குழுவை உருவாக்க வற்புறுத்துவோம்.

•             பூம்புகார், கொற்கை, அழகன்குளம் உள்ளிட்ட கடற்கரை நகரங்களில் முழுமையான ஆய்வு நடத்தப்படுவதோடு, பழந்தமிழர்களின் வாணிப மற்றும் பண்பாட்டு தொடர்புகளை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.

•             இந்தியாவிலேயே அதிகமான கல்வெட்டுகள் கிடைக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் கல்வெட்டு பணிகள் பராமரிப்பு மையத்தை சென்னையிலேயே அமைத்திட ஒன்றிய அரசின் தொல்லியல் துறையை வலியுறுத்துவோம்.  இதுவரை படியெடுக்கப்படாத கல்வெட்டுகள் மற்றும் ஓலைச் சுவடிகளை முழுமையாக ஆவணப்படுத்தப்பட வலியுறுத்துவோம். அச்சேற்றப்படாத பழைமையான நூல்கள் அனைத்தையும் அச்சிலேற்றிட வலியுறுத்துவோம்.

7. ஜனநாயக உரிமைகள்

•             ஜனநாயக உரிமைகள் மீதும் கருத்து சுதந்திரத்தின் மீதும் ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதலை முறியடித்து, அவற்றைப் பாதுகாப்பதை மார்க்சிஸ்ட் கட்சி முக்கிய கடமையாகக் கொண்டு செயல்படும்.

•             மக்களின் போராட்ட உரிமையைப் பாதுகாக்கவும், அதற்கு எதிராக காவல்துறை தொடுக்கும் அடக்குமுறைகளை எதிர்த்தும் குரல் கொடுப்போம். காவல் நிலைய சித்திரவதைகள், லாக்கப் மரணங்கள் போன்ற மனித உரிமை மீறல்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திடவும் அயராது பாடுபடுவோம். போராட்டங்களுக்கான இடங்களை அனுமதிக்க மறுக்கும் போக்கினை வன்மையாக எதிர்ப்போம். 

•             ஜனநாயக ரீதியாக மாநில சட்டமன்ற செயல்பாடுகள் அமைந்திடவும், கூட்ட நாட்களை அதிகரித்து, விவாத நேரத்தை கூடுதலாக்க தொடர்ந்து வற்புறுத்துவோம்.

8. கருத்துரிமை

•             இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துரிமை, பேச்சுரிமை, படைப்புரிமையை பாதுகாக்க வலியுறுத்துவோம்.

•             கருத்துரிமையின் கழுத்தை நெறிக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள கொடூரமான சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்துவோம்.

•             ஆர்.எஸ்.எஸ் வெறுப்பு அரசியல் அடிப்படையில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் திரைப்படங்கள், சமூக ஊடக பிரச்சாரங்கள், போலிச் செய்திகள் கட்டமைப்பை தொடர்ந்து எதிர்ப்போம்.

•             கருத்துரிமைக்காக குரல் கொடுத்த மனித உரிமை செயற்பாட்டாளர்களை ஒன்றிய அரசு பொய் வழக்குகள் அடிப்படையில் கைது செய்து எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் அடைத்துள்ளது. இவர்கள் அனைவரையும் விடுவிக்க வலியுறுத்துவோம்.

•             ஊடகங்களை ஒன்றிய ஆட்சியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மக்களின் கருத்தறியும் உரிமையை மறுத்து வருகின்றனர். ஊடக வெளியை பொதுவெளியாக, சுதந்திர வெளியாக மாற்ற குரல் கொடுப்போம்.

•             கலை இரவுகள் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்வுகளை வழக்கம்போல இரவு முழுவதும் நடைபெறும் வகையில் விதிகளைத் திருத்த வலியுறுத்துவோம்.

•             ஒன்றிய அரசின் 2024 ஆம் ஆண்டு புதிய அஞ்சலக விதிமுறைகளின்படி நாளேடுகள் மற்றும் வார ஏடுகள் தவிர ஏனைய கால இடைவெளியில் வெளியாகும் பத்திரிக்கைகளுக்கு தபால் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இலக்கிய மற்றும் சிறு பத்திரிக்கைகள் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுமக்கள் அமைப்புகளால் நடத்தப்படும் பத்திரிக்கைகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் மூடப்பட்டுள்ளன. பத்திரிக்கைகளுக்கான தபால் கட்டணம் 850 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த ஜனநாயக விரோத சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்துவோம்.

9. மதச்சார்பின்மை

•             மதத்தையும், அரசியலையும் பிரித்து அணுகும் மதச்சார்பின்மை கோட்பாடு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தூண்களில் ஒன்றாக விளங்குகிறது.  இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் மதச்சார்பின்மைக் கொள்கைக்கு எந்தத் தரப்பில் அச்சுறுத்தல் வந்தாலும், அதனைத் தடுத்து, மதச்சார்பின்மையை நிலைநாட்டிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முனைப்புடன் செயல்படும்.

•             மதம், இனம், சாதி, பாலினம்,பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசு எந்த நபருக்கும்  எதிர்மறை பாகுபாடு கடைபிடிக்கக் கூடாது என்பதிலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதிலும் உறுதியாக நிற்போம்.அரசியல் பிரச்சினைகளில் மதவாதக் கண்ணோட்டம் ஊடுருவுவது, அரசு நிர்வாகம், சட்டம் உள்ளிட்ட துறைகளில் மதப் பாரபட்ச அணுகுமுறை ஆகியவற்றைத் தவிர்த்திட மக்களின் விழிப்புணர்வை வலுப்படுத்துவோம்.

•             குடிமக்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்றவும் பரப்பிடவும் உள்ள உரிமைகளை பாதுகாப்போம். அரசு நிர்வாகத்தில் மதச் சடங்குகள் தவிர்க்கப்படுவதை  வலியுறுத்துவோம்.

•             தமிழகத்தில் மதவாத சக்திகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் சிறுபான்மை மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை உறுதி செய்வோம். கல்வி உரிமைகள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையோர் உரிமைகளைக் காப்பதில் உறுதியாக செயல்படுவோம்.

10. வருவாய் ஈட்டல்

•             கடந்த பத்து ஆண்டுகளாக பாஜக ஒன்றிய அரசு வருவாய் பகிர்வில் மாநிலங்களின் உரிமைகளை மறுத்து வருகிறது. மாநிலங்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய வரி மற்றும் இதர வருமானங்களை தராமல் வஞ்சிக்கிறது. செஸ், சர்சார்ஜ் உள்ளிட்ட பல உத்திகளை ஒன்றிய அரசு பின்பற்றி மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதிகளை தர மறுக்கிறது. இதனை எதிர்த்தும் மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி ஆதாரங்களைக் கோரியும் வலுவான மக்கள் இயக்கங்களை முன்னெடுப்போம்.  

•             வரி உயர்வு, கூடுதல் கட்டண விதிப்பு போன்ற பொருளாதாரச் சுமைகளை மக்கள் மீது ஏற்றிடாமல் மாற்று வருவாய் ஈட்டல் வழிமுறைகளை பின்பற்ற மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தும். வரி வசூல் நிர்வாக அமைப்பை சீர்செய்து நெறிப்படுத்துவதன் மூலம் இதனை சாதிக்க ஆலோசனைகளை உருவாக்குவோம். இயற்கை வள மேலாண்மையை உரிய வகையில் மேம்படுத்தி அரசுக்கு வருமானம் ஈட்ட பொருத்தமான முன்மொழிவுகளை கண்டறிந்து முன்வைப்போம்.  

•             தாது மணல், கிரானைட், கல் குவாரிகள் மற்றும் ஆற்று மணல் விற்பனையில் முறைகேடுகளை தடுத்து, முழுமையாக அரசாங்கமே ஏற்று நடத்தி முறைப்படுத்திட வலியுறுத்துவோம். மாநிலத்தில் எடுக்கப்படும் கனிமங்களுக்கான ராயல்டி விகிதத்தை கூடுதலாக்குவது, அரசு நிலங்களில் நீண்ட கால குத்தகைக்கு இருக்கும் இந்திய பெரு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் சந்தை மதிப்பிற்கு உகந்தவாறு குத்தகை உயர்த்தி வசூல் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வற்புறுத்துவோம்.

•             இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் (கூநைச 2&3 உவைநைள) தொழிற்சாலைகளைத் தொடங்கி வேலைவாய்ப்பு மற்றும் வருவாயைப் பெருக்குவது, மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் நிர்வாக சீர்கேடுகளை களைந்து நிதி பயன்பாட்டை முறைப்படுத்த உரிய முன்னெடுப்புக்களை பின்பற்ற வலியுறுத்துவோம்.

•             ஒன்றிய அரசிடமிருந்து மாநிலத்திற்கு வரவேண்டிய வரிப் பகிர்வு, ஜிஎஸ்டி இழப்பீடு, மாநில வருவாயில் பெரும் பங்கு வகிக்கின்றது. அவற்றையும், இதர நிலுவைத் தொகைகளையும் முழுமையாகப் பெறுவதற்கு தொடர்ந்து குரல் கொடுப்போம். மாநிலங்களின் நிதி உரிமைகளை காக்க முன்வரும் இதர மாநிலங்களுடன் இணைந்து செயல்பட உள்ள வாய்ப்புகளை பரிசீலித்து முன்னெடுப்போம்.  

•             ஒன்றிய அரசு வசூலிக்கும் வரிகளில் மாநிலங்களுக்கான பங்கினை 50 சதவீதமாக உயர்த்துவது, செஸ் (ஊநளள) மற்றும் கூடுதல் கட்டணங்கள் (ளுரசஉhயசபந) மூலம் மாநிலங்களுக்குப் சேர வேண்டிய வருவாயை ஒன்றிய அரசு பறிப்பதைத் தடுத்து, அவற்றை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்வது ஆகியவற்றை வலியுறுத்துவோம்.

•             ஒன்றிய அரசு தானே முடிவெடுத்து திட்டங்களை அறிவித்து விட்டு  பின்னர் அத்திட்டங்களுக்கான செலவில் தனது பங்கை குறைத்துக்கொண்டு சுமைகளை மாநில அரசுகள் மீது போடும் போக்கை உறுதியாக எதிர்ப்போம். ஒன்றிய அரசின்  கூடுதல் வருமான பங்களிப்பை கோருவோம்.

11. ஊழல் ஒழிப்பு

•             அரசு இயந்திரம் ஒவ்வொரு மட்டத்திலும் ஊழலற்று, நேர்மையாக  செயல்படும் நிலையை உறுதி செய்ய போராடுவோம். உயர்மட்ட ஊழலைத் தடுக்க லோக் ஆயுக்தா அமைப்பிற்கு முழு அதிகாரமும், தன்னாட்சியும் வழங்கி விசாரணைகளை வேகப்படுத்தவும், தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், அரசு -தனியார் கூட்டுத் திட்டங்களை லோக்பால் சட்ட வரம்புக்குள் கொண்டு வரவும் வலியுறுத்துவோம்.

•             அரசு சேவைகளுக்கு இடைத்தரகர்கள் இல்லாத ஆன்லைன் முறையை 100 சதவிகிதம் அமல்படுத்துவது, அரசாங்கப் பொறுப்புகளில் உள்ள அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள் சொத்து விபரங்களை ஒவ்வொரு ஆண்டும் பொதுவெளியில் வெளியிடுவது, ஊழல் புகார்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்துவது, ஊழல் நிரூபிக்கப்பட்டால், ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்வது  போன்றவற்றை முன்னிறுத்திக் குரல் எழுப்புவோம். ஊழலை அம்பலப்படுத்துவோருக்கு சட்டப்பூர்வப் பாதுகாப்பை உறுதி செய்ய வற்புறுத்துவோம்.

12. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை:

•             கேரளத்தை போலவே தமிழ்நாட்டிலும் ‘சேவை பெறும் உரிமை சட்டத்தை’ கொண்டுவர பாடுபடுவோம்.

•             மக்களுக்கு அரசின் செயல்பாடுகளை முழுமையாக அறிந்து கொள்ளும் வாய்ப்புகளை உறுதிப்படுத்தி, அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை நிலைநாட்ட மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்.

•             தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்குக் குறிப்பிட்ட காலத்திற்குள், எவ்விதத் தடங்கலுமின்றிப் பதில் அளிப்பதைக் கட்டாயமாக்க வற்புறுத்துவோம்.

•             அரசின் ஒப்பந்தங்கள், அரசாணைகள், பயனாளிகள் பட்டியல் மற்றும் நிதி ஒதுக்கீடுகளைப் பொதுமக்கள் இணையதளத்தில் நேரடியாகப் பார்க்கும் வசதி, அரசுத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த புள்ளிவிவரங்களை உடனுக்குடன் வெளியிடுதல் ஆகியவற்றை வற்புறுத்துவோம்.

•             ஊழியர்களுக்கு நவீன தொழில்நுட்பப் பயிற்சி அளித்தல் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்துவது போல் கிராம நிர்வாக அலுவலகங்கள் வரை உரிய கால இடைவெளியில் நேரடி குறைதீர்ப்பு முகாம்களை நடத்த வலியுறுத்துவோம். 

•             உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்களின் முழுமையான பங்கேற்பு வெளிப்படை தன்மைக்கு அவசியமானது. இதற்கு கிராமசபை, நகர்ப்புற வார்டு சபை, வார்டு கமிட்டிகளின் செயல்பாடுகளை வலுப்படுத்துவோம்.

13. சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்

•             சிறு-குறு, நடுத்தர தொழில்கள் பாதிக்கப்படும் நிலையில் அரசு நிதி நிறுவனங்கள் வாயிலாக வட்டி மானியம், வராக்கடன் கால வரையறைகளில் தளர்வு போன்ற நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வலியுறுத்துவோம்.

•             எம்.எஸ்.எம்.இ.-க்கான ஒப்புதலை வழங்க ஒருங்கிணைந்த ஒற்றை சாளர முறையை அமலாக்குவதும், ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. காரணமாக ஏற்பட்டு பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து மீட்டெடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எம்.எஸ்.எம்.இ-யில் தொழில்முனைவோருக்கு ஏற்கனவே உள்ள தமிழ்நாடு அரசு முதலீட்டு கழகம் மற்றும் தாட்கோ அமைப்புகள் மூலம் கடன் வசதிகள் அதிகரிக்க பாடுபடுவோம்.

•             சர்வதேச, தேசிய அளவில் சந்தைப்படுத்துதலுக்கான சிறப்பு மையங்களை ஏற்படுத்தவும், சிறு-குறு நிறுவனங்களில் உற்பத்தியாகும் பொருட்களை கொள்முதல் செய்வதில் அரசின் பங்களிப்பை கூடுதலாக்க வலியுறுத்துவோம்.

•             எம்.எஸ்.எம்.இ. தொழில்களோடு சம்மந்தப்பட்ட வரிக்கொள்கைகள், அனைத்து வகை கட்டணங்கள் தொழிலைப் பாதிக்காத வண்ணம் மாறுதல் செய்ய பாடுபடுவோம். 

•             மின்கட்டண விகிதங்களில் நிலைக்கட்டணம், பீக் ஹவர், மின்  உபயோக கட்டணங்களிலும், இயற்கை சார்ந்த மின் உற்பத்திக்கு எவ்வித அழுத்தங்களும் இல்லாமல் தேவையான ஆக்கமும், ஊக்கமும் பெற போராடுவோம். மேற்கூரை / ழுஐளுளு சோலார் நெட்வொர்க், காற்றாலை நிறுவுவதற்கான தேவையற்ற கட்டணங்களை குறைக்கவும், 112 கிலோ வாட்டுக்கு கீழே தொழில் புரியும் மின் நுகர்வோருக்கு பீக் ஹவர் கட்டணத்தையும், கிலோ வாட் கட்டணத்தையும் நீக்கவும் பாடுபடுவோம்.

•             இத்துறையில் பாலின சமத்துவத்தோடு பெண் தொழில் முனைவோர்கள் கூடுதலாக பங்கேற்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சிறுகுறு தொழில்களில் அனைத்து பெண்களுக்கும் அதிகாரமளித்தல் மற்றும் நீடித்த நிலையான பொருளாதார வளர்ச்சியும், கண்ணியமான வேலை வாய்ப்பும் பெற்றிட போராடுவோம். சிறு-குறு உற்பத்திக்கான சந்தைப்படுத்தலுக்கான மையங்களை உருவாக்க வற்புறுத்துவோம்.

•             ஜாப்வொர்க் செய்பவர்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து முழு விலக்கு பெறவும்,  அதுவரை ஜாப் ஆர்டருக்கு  5 சதவிகிதமாக குறைக்கவும் முயற்சிப்போம். தமிழக வணிக வரித்துறையின் கீழ்வரும் சிறு-குறு தொழில்கள் வரிவிதிப்பில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் குளறுபடிகளைத் தீர்க்க சீர்திருத்த கமிட்டியை ஏற்படுத்த பாடுபடுவோம்.

•             மூலப்பொருட்களின் தாறுமாறான விலை மாற்றத்திலிருந்து சிறு-குறு தொழில்களை பாதுகாக்க இரும்பு, தாமிரம், அலுமினியம் உள்ளிட்ட அடிப்படை மூலப்பொருட்கள், சீரான விலையில் வழங்கிட அமைப்புகள் (சுயற ஆயவநசயைட க்ஷயமேள) உருவாக்க வற்புறுத்துவோம்.

•             தமிழ்நாட்டின் பிரதான தொழில்களான நகை செய்தல், மோட்டார் பம்ப், வெட்கிரைண்டர், பட்டாசு, ஜவுளி, தென்னை சார் தொழில்கள், கோழிப் பண்ணை, அனைத்து உபரி பாக உற்பத்திகள் உள்ளிட்ட சிறு-குறு நடுத்தர தொழில்கள் வளர்ச்சிக்கும், பரவலாக தொழில் மையங்களில் ஒருங்கிணைந்த தொழில்பேட்டைகள் விவசாய உற்பத்திக்கு இடையூறு இல்லாமல் உருவாக்கிடவும் போராடுவோம்.

••           தோல் தொழில், சாயப்பட்டறைக் கழிவுகளை சுத்திகரிக்க அமைக்கப்பட்டுள்ள சி.இ.டி.பி தொழில்நுட்பங்கள் தொடர்ந்து மேம்படுத்தவும், பூஜ்ஜிய சுத்திகரிப்பை உறுதி செய்வதன் மூலம்  சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தவும் தொடர்ந்து உழைப்போம்.

•             இந்தியாவின் பருத்தி, பின்னலாடை ஏற்றுமதியில் 90 சதவிகிதம் பங்கு வகிக்கும் திருப்பூர் ஏற்றுமதி மையத்திற்கு அரசு கட்டமைப்பில் கண்காட்சி மையம் உள்ளிட்டு அனைத்து விதங்களிலும் தனி கவனம் செலுத்தப்படும். சிறு-குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தி, சந்தைப்படுத்த, விரிவுபடுத்த மற்றும் ஏற்றுமதிக்கான கால் சென்டர் உருவாக்க வலியுறுத்துவோம்.

•             காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா போன்று தமிழ்நாடு பருத்திக் கழகம் என்கிற அமைப்பை உருவாக்கி சீரான விலையில் மில்களுக்கு மூலப்பொருள்கள் விநியோகிக்க வலியுறுத்துவோம். உப்பளத் தொழில்களை பாதுகாக்கும் வகையில் சலுகை விலையில் மின்சாரம் வழங்கிட வலியுறுத்துவோம்.

•             பின்னாலாடை,  பஞ்சாலை,  உதிரிபாக தயாரிப்பு உள்ளிட்டு சிறு குறு, நடுத்தர தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் குடியிருப்பதற்கான குடியிருப்புகளை தொழிற்சாலை வளாகங்களில் அருகில் அமைக்க அரசு நிலங்களை வழங்குவது. வீடுகளை கட்ட தொழிற்சாலைகளின் பங்களிப்போடு மானியங்களை வழங்கியது  அனுமதி வழங்கிடுதற்கான சட்ட நடைமுறைகளை எளிமையாக்கிடுவது உள்ளிட்டவற்றை நிறைவேற்ற வலியுறுத்துவோம்.

•             செயற்கை நுண்ணறிவு, ரோபாடிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கேற்ப சிறு/குறுந்தொழில்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்தவும், வேலைவாய்ப்பை பாதிக்காத வகையில் அவற்றைப்  பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் தலையீடுகளை மேற்கொள்வோம்.

14. வேளாண்மை, விவசாயிகள் நலன், நிலம்

•             விளை நிலங்களை வளர்ச்சித் திட்டங்களுக்காக என்று விவசாயிகள் ஒப்புதலின்றி அரசு கையகப்படுத்துவதை தடுத்திடுவோம். அரசு மற்றும் தனியார் புதிய திட்டங்களுக்கு விவசாயத்திற்கு பயன்படாத தரிசு நிலங்களை ஒதுக்கீடு செய்திட வழிவகை செய்ய வலியுறுத்துவோம்.

•             பல தலைமுறைகளாக கோயில், மடம், அறக்கட்டளைகள், வக்ப் ஃபோர்டு இடங்களில் வீடுகட்டி குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு சட்டப்படி பட்டா வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்கண்ட நிலங்களில் பல தலைமுறைகளாக சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கே நிலங்களை சொந்தமாக்கிட வற்புறுத்துவோம்.

•             1989 அரசாணை (1168)ல் விதிவிலக்கு அளித்து பல தலைமுறைகளாக அனுபவத்தில் உள்ள விளை நிலங்களுக்கு பட்டா வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு தரிசு நிலங்கள், இனாம் நிலங்கள், உபரி நிலங்கள் உள்ளிட்டவற்றை நிலமற்றவர்களுக்கு வழங்கிட வலியுறுத்துவோம்.

•             அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை உற்பத்தி செலவுகளுக்கு மேல் 50 சதம் உயர்த்தி (சி 2 + 50 சதவிகிதம்)  வழங்கிட ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். ஒன்றிய அரசு அறிவிக்கும் ஆதார விலை அனைவருக்கும் கிடைத்திட மத்திய சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும்.

•             மாநில அரசு வேளாண் விற்பனை துறையை பலப்படுத்திட, உழவர் சந்தைகளை காலை, மாலை இருவேளைகளில் செயல்படுத்திட, விளைபொருட்களுக்கான ஊக்கத்தொகையினை ஆண்டுதோறும் உயர்த்தி வழங்கிட, காய்கறிகள் விலை குறைகிற காலங்களில்  உற்பத்தி செலவுடன் கூடுதல் விலை கொடுத்து மாநில அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்திட வற்புறுத்துவோம்.

•             விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு பலன்கள் முழுமையாக கிடைத்திட மாநில அரசு காப்பீட்டு நிறுவனத்தை துவக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர்க்கடன் உள்ளிட்ட விவசாய பயன்பாட்டிற்கான கடன் மற்றும் மானியங்கள் வழங்குவதில் சிறு-குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்துவோம்.

•             வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்திட விவசாயிகள் கூடுதல் வருவாய் பெற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விளைபொருட்கள் ஏற்றுமதிக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரிய ஊக்கத்தொகை வழங்குவதோடு, இதற்கென்று தனியான விற்பனை மையங்களை அரசு சார்பில் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகள் உற்பத்தி அமைப்புகளை (குஞடீ) திறம்பட செயல்படுத்திட மாநில அரசு கூடுதல் ஒத்துழைப்பு வழங்கிட வலியுறுத்தப்படும்.

•             சுதந்திர வர்த்தகம் என்கிற பெயரில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வேளாண் விளைப் பொருட்கள், பால் பொருட்களை இறக்குமதி செய்திடும், உள்நாட்டு விவசாயிகள் நலன்களை பாதிக்கும் ஒன்றிய அரசின் கொள்கைகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி போராடும்.

•             இடைத்தரகர்கள் இன்றி காபி வாரியம் நேரடியாக காபி கொள்முதல் செய்திட வலியுறுத்தப்படும். காபி வாரியம் தரும் மானியங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பது உறுதி செய்யப்படும்.  மாநில அரசு காபிக்கு ஊக்கத்தொகை வழங்கிட வலியுறுத்தப்படும். மிளகு, ரப்பர் உள்ளிட்ட தோட்ட பயிர்களுக்கு ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஆதார விலை அறிவித்திட வலியுறுத்தப்படும்.

•             சிறுதானியங்கள், பருத்தி மற்றும் மானாவரி பயிர்கள் சாகுபடி ஊக்கப்படுத்தப்படும். விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை பாதுகாத்து வைத்திட குளிர்சாதன குடோன்கள் அரசு அமைத்திட வலியுறுத்தப்படும்.

•             தென்னை விவசாயிகளிடமிருந்து உரித்த முழுத்தேங்காய், கொப்பரை கொள்முதல் செய்வதோடு ரேசன் கடைகளில் வழங்கப்படும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தென்னை ஆராய்ச்சி, விரிவாக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கிட வலியுறுத்தப்படும்.

•             வேளாண் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களுக்கு தேவையான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப புதியவகை விதைகள் உற்பத்தி செய்ய வலியுறுத்துவோம்.

•             அறிவியல் முறையில் விவசாயத்தை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி திறன் மேம்படுத்தவும், மண் வளத்தை பாதுகாக்கவும் தேவையான பயிற்சியை அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்துவோம்.

•             வேளாண் துறையின் கீழ் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை முழுமையாக முறைப்படுத்தி, விவசாயிகள் பயன்படும் வகையில் மேம்படுத்திடவும், அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளுக்குக் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மற்றும் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமைப்பணி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடவும், அவர்களது சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வலியுறுத்துவோம்.

•             விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவசமாக கிடைப்பதற்கும், மின் இணைப்பு கோரி காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் விரைவாக மின் இணைப்பு கிடைப்பதற்கும் வலியுறுத்துவோம்.

•             விவசாய  நிலங்களில் அமைக்கப்பட்ட உயர்மின் அழுத்த கோபுரங்களுக்கு உரிய நஷ்ட ஈடும், நிலம் எடுக்கப்பட்ட விவசாயி வீட்டில்  ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க பாடுபடுவோம்.

•             வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு உயர்த்தி வழங்கிடவும், வன விலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பங்களுக்கு பதினைந்து லட்சம் ரூபாய் வழங்கிடவும் வலியுறுத்தப்படும்.

15. கரும்பு விவசாயிகள் நலன்

•             கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசு  பரிந்துரை விலை வழங்கிட (ளுவயவந ஹனஎளைநன ஞசiஉந-ளுஹஞ) வற்புறுத்துவோம்.

•             மூடிக்கிடக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நலிவுற்றுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை முழுமையாக புதுப்பித்திட மாநில அரசை வலியுறுத்துவோம்.

16. பால் உற்பத்தியாளர்கள் நலன்

•             பால் கொள்முதல் விலை மற்றும் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கிடவும்,  மானிய விலையில் மாட்டுத்தீவனங்கள் வழங்கிடவும் மாநில அரசை வலியுறுத்துவோம்.

•             ஆவின் கூட்டுறவு அமைப்பை பலப்படுத்தி பால் கொள்முதலை இரட்டிப்பாக்கிட  வற்புறுத்துவோம்.

17. கறிக்கோழி விவசாயிகள் நலன்

•             முத்தரப்புக் கூட்டம் நடத்தி கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு நிறுவனங்கள் கூலி உயர்வு வழங்கிட, கறிக்கோழி வளர்ப்போர் மற்றும் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்திட மாநில அரசை வலியுறுத்துவோம். கால்நடைகள், மீன்வளர்ப்பு ஆகியவை ஊக்கப்படுத்த வற்புறுத்துவோம்.

18. பாசனம் மற்றும் நீர் மேலாண்மை

•             காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டம் நிதி ஒதுக்கி விரைந்து செயல்படுத்திடவும், காவிரி – தென்பெண்ணை உபரி நீரை கால்வாய்கள் வெட்டி வறண்ட ஏரிகளுக்கு நிரப்பும் நிலத்தடி நீர் செறிகூட்டும் திட்டங்களை செயல்படுத்திட வலியுறுத்துவோம். நல்லாறு, ஆனைமலையாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும், அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம் – குட்டைகளை இணைத்திடவும் வலியுறுத்தி போராடுவோம்.  

•             நீர்ப்பாசன கட்டமைப்பை மேம்படுத்திட சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யவும்,  அண்டை மாநிலங்களோடு உள்ள நதி நீர் தாவாக்களில் தமிழ்நாட்டின் பாசன உரிமையை பாதுகாத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவோம்.

•             உபரிநீரை பயன்படுத்திடவும், மழைக்காலத்தில் கிடைத்திடும் கூடுதலான தண்ணீரை விவசாயத்திற்குப் பயன்படுத்திட உரிய புதிய திட்டங்கள் வகுக்க வலியுறுத்துவோம்.

•             ஆண்டுதோறும் பாசன மற்றும் வடிகால் ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு கடைமடைப்பகுதி வரை காலத்தோடு தண்ணீர் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகளுக்கு இடையூறு இல்லாமல் கிடைப்பதற்கு உறுதி செய்ய வற்புறுத்துவோம்.

19. விவசாயத் தொழிலாளர்கள் நலன்

•             வேளாண் மற்றும் அதன் சார்புத் தொழில்களில் 1 கோடிக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், “விவசாயத் தொழிலாளர்கள் நலவாரிய சட்டம்” நிறைவேற்ற மாநில அரசை வலியுறுத்துவோம்.

•             வேலை உரிமையை நிலைநாட்டவும் – ஒன்றிய திட்டமான ஊரக வேலை உறுதி திட்டம் முழுமையாக செயல்படுத்திடவும், தினக்கூலி ரூ.700/- ஆகவும், வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்திடவும், நகர்ப்புற வேலைத்திட்டத்தை  பேரூராட்சி மற்றும் நகர்ப்புற பகுதியில் விரிவாக்கி செயல்படுத்திடவும் ஒன்றிய – மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுப்போம்.

•             “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற அடிப்படையில், 1 மணி நேர ஓய்வுடன் கூடிய 8 மணி நேர வேலைக்கு ரூ.700/- சட்டக்கூலி நிர்ணயம் செய்திடவும், விலைவாசி உயர்வு கணக்கில் கொள்ளப்பட்டு ஆண்டுதோறும் கூலியை உயர்த்திடவும் குரல் கொடுப்போம்.

•             அறுபது வயதைக் கடந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 5,000/- உதவித் தொகை வழங்கிட வலியுறுத்துவோம்.

20. தொழிலாளர் நலன்

•             நான்கு  தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை கேரள மாநிலத்தை போல தமிழ்நாட்டிலும் அமல்படுத்தாமல் இருக்க வலியுறுத்துவோம்.

•             ஜனநாயக ரீதியில் போராட்டங்களில் பங்கேற்ற தொழிலாளர்கள் மீது காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வற்புறுத்துவோம்.

•             புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குறைந்த கூலி, விபத்து, மரணம் என பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க பாடுபடுவோம்.

•             தொழிற்சங்க உரிமைகளை பாதுகாப்பது, கூட்டுப் பேர உரிமையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வலியுறுத்துவோம். ரகசிய வாக்கெடுப்பு மூலம் தொழிற்சங்க அங்கீகாரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் வற்புறுத்துவோம்.

•             பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் சட்டப்படியான வேலை நேரம், பணி பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு  என்பதை கட்டாயமாக நடைமுறைப்படுத்த போராடுவோம். சங்கம் வைத்ததற்காக எடுக்கப்பட்ட அனைத்துவிதமான பழிவாங்கல் நடவடிக்கைகளையும் திரும்ப பெற பாடுபடுவோம். தொழிற்தாவாக்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்க்கப்பட வலியுறுத்துவோம்.

•             பணி ஓய்வு, பணியின் போது விபத்து மற்றும் மரணம் உள்ளிட்டவற்றில் தொழிலாளர் மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கு சேர வேண்டிய சட்டப்படியான பணப்பயன்கள் காலதாமதமின்றி வழங்கப்பட வற்புறுத்துவோம்.

•             தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார உயர்வுக்கு உதவும் முதலீடுகளை பயன்படுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் தொழிற்பேட்டைகள் உருவாக்க வலியுறுத்துவோம். அதேசமயம், தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளும், தொழிற்சங்க உரிமைகளும் முழுமையாக பாதுகாக்கப்பட பாடுபடுவோம்.

•             புலம் பெயர்ந்த தொழிலாளர்களை முறையாக பதிவு செய்து பட்டியலை பராமரிக்க வலியுறுத்துவோம்.  அவர்களுக்கான சட்டங்களை முழுமையாக அமலாக்க வற்புறுத்துவோம்.

•             பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளருக்கு 25 ஆண்டுகளுக்குமேலாக குறைந்தபட்ச ஊதியம் வரையறை செய்யாத சூழலில் அதனை உடனடியாக  நிர்ணயம் செய்ய வற்புறுத்துவோம்.

•             தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு இதர பொது துறை நிறுவன ஊழியர்களுக்கு வழங்கும் போனஸ் தொகை வழங்கவும், ஒப்பந்த தொழிலாளருக்கும் போனஸ் வழங்கவும், திட்ட மதிப்பீடு தயாரிக்க ஊழியர்களின் ஊதிய விகிதம், ஊழியர்கள் எண்ணிக்கை சேர்க்கவும் வலியுறுத்துவோம்.

•             தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரியும் பருவகால பணியாளர்களையும், கணிணி ஆப்ரேட்டர்களையும் பணிவரன்முறைப்படுத்த வலியுறுத்துவோம்.

•             அரசு துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் தரவு உள்ளீட்டு பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்தவும், காலமுறை ஊதியம் கிடைக்கவும் பாடுபடுவோம்.

•             டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களது நீண்ட கால கோரிக்கைகள்  நிறைவேற்றும் வகையில் பணிவரன்முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்கிட வழிவகை செய்ய வலியுறுத்துவோம்.

•             விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவும், அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் ஒரு குழு அமைத்து உரிய முறையில் தீர்வு காண வலியுறுத்துவோம். பாரம்பரியமான கைத்தறி, பீடி, தீப்பெட்டி, பட்டாசு போன்ற  தொழில்களில் உள்ள தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள பாடுபடுவோம்.

21. வேலை நேரம்

•             அனைத்து துறைகளிலும் வேலைநேரத்தை அதிகபட்சம் 8 மணி நேரமாக நிர்ணயிக்கவும், படிப்படியாக வேலை நேர குறைப்பிற்கும் வலியுறுத்துவோம். மிகை நேரத்திற்கு இரட்டிப்பு சம்பளம் சட்டப்படி வழங்கவும் வற்புறுத்தப்படும்.

•             விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு அரசு மற்றும் தனியார் துறைகளில் அனைத்து பிரிவு தொழிலாளருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ. 26,000/- வழங்கிட வலியுறுத்துவோம்.

22. காலமுறை ஊதியம்

•             அரசு துறைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் மதிப்பூதியம், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வலியுறுத்துவோம்.

•             துப்புரவு பணியாளர் மற்றும் துய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதிய முறை ரத்து செய்யப்பட்டு காலமுறை ஊதியம் நிர்ணயிக்க பாடுபடுவோம்.

•             அரசு மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு நிரந்தரப்பணி அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்துவோம்.

23. கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு

•             கொத்தடிமை தொழிலாளர்களை மீட்பதிலும் மறுவாழ்வு அளிப்பதிலும் தமிழகத்தை  முன்னோடி மாநிலமாக்க குரல் கொடுப்போம்.

•             செயல் நடைமுறைகளை வலுப்படுத்தி, கொத்தடிமைகளை கண்டறிதல், மீட்பு, மற்றும் மறுவாழ்வு, சட்ட உதவி, குற்றவாளிகளுக்கு விரைவான மற்றும் கடுமையான  தண்டனைகள் என சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, இது சார்ந்த தரவுத்தளம் உருவாக்குதல் மற்றும் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தமிழ்நாட்டை கொத்தடிமை தொழில் முறை இல்லா மாநிலமாக உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

திட்ட ஊழியர்கள்

24. அங்கன்வாடி

•             ஐம்பது ஆண்டுகளாக செயல்படும் ஐசிடிஎஸ் திட்டத்தை தனித்துறையாக மாற்றி அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,  இத்திட்டத்தில் பணியாற்றும் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்துவோம். அதுவரை, குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26,000/- வழங்கிட வற்புறுத்துவோம்.

•             குழந்தைகளின் பாதுகாப்பையும் முன் பருவ கல்வியின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வற்புறுத்துவோம்.

•             அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் உதவியாளர்களை நியமனம் செய்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்துவோம்.

25. ஆஷா ஊழியர்கள்

•             மலைப்பகுதிகளில் வாழும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள் மருந்துகள், மருத்துவ மனைகளுக்கு அழைத்து வந்து உடல் பரிசோதனை செய்தல். ஊட்டச்சத்துக்கு தேவையான மாத்திரைகள் வழங்குதல். சுக பிரசவத்திற்கான அனைத்து பணிகளையும் செய்யும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள இத்தொழிலாளர்களின் ஊதியம் குறைந்தபட்சம் ரூ. 26,000 ஆக வழங்கிட வலியுறுத்துவோம்.

•             ஆஷா தொழிலாளர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் சுகாதாரத்துறையில் நிரந்தர பணி வழங்கிட வலியுறுத்துவோம்.

26. மக்களை தேடி மருத்துவம்

•             முதியோர்களுக்கும், சர்க்கரை நோய், காச நோய் போன்ற தொடர் சிகிச்சை எடுக்க வேண்டிய நோயாளிகளுக்கும் மருத்துவமனைக்கு வந்து செல்வதில் உள்ள சிரமத்தை கணக்கில் கொண்டு ஒரு நல்ல நோக்கத்தோடு துவக்கப்பட்ட திட்டத்தில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் தினமும் 9 முதல் 12 மணிநேரம் வரை பணியாற்றுகிறார்கள்.  இவர்களது பணிச்சுமையை கருத்தில் கொண்டு முதலில் இவர்களை தொழிலாளர்களாக அங்கீகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்துவோம்.

•             இத்தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமான ரூ. 26,000 கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள பாடுபடுவோம். மாத விடுப்பு, போனஸ், பணி ஓய்வு கால பலன்கள் போன்ற அனைத்தும் அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று இவர்களுக்கும் வழங்கிட வலியுறுத்துவோம்.

27. ஒப்பந்த தொழிலாளர் நலன்

•             அரசுத் துறைகளிலும், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிலும் நிரந்தர பணிகளில் தொழிலாளர்களை ஒப்பந்தக் கூலிகளாக்கி உழைப்பு சுரண்டப்படுவதை தடுக்கவும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் கிடைக்கவும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்துவோம்.

•             உள்ளாட்சி துறை, அரசு  மருத்துவ மனைகள் போன்ற அரசு துறைகளிலும் போக்குவரத்து, மின்சாரம், கூட்டுறவு போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களிலும் நிரந்தரத் தன்மையுள்ள பணிகளில் ஒப்பந்த தொழிலாளர் முறை (நிரந்தரமற்ற தொழிலாளர் முறை) அனுமதிக்க மாட்டோம்,  தற்போது இத்துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தவும் எதிர்காலத்தில் வரும் காலி பணியிடங்களில் நிரந்தரத் தொழிலாளர்களை வைத்து பூர்த்திசெய்யவும் வற்புறுத்துவோம்.

•             மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட குறிப்பாக அதில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்திட வலியுறுத்துவோம்.

28. பெண் தொழிலாளர் நலன்

•             அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் சட்ட உரிமைகள் அமலாக்கவும், மகப்பேறு கால சட்டப்படியான சம்பளத்துடன் விடுப்பு கிடைக்கவும், மாதவிடாய் விடுப்பு சம்பளத்துடன் கிடைக்கவும் பாடுபடுவோம்.

•             பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுக்க புகார் கமிட்டிகள்/ ஸ்தல புகார் கமிட்டிகள் அமைக்க குரல்கொடுப்போம்.

29. முறைசாரா தொழில்

•             கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு உள்பட தொழில்வாரியான நல வாரியங்களை மத்திய பாஜக அரசு சமூக பாதுகாப்பு சட்ட தொகுப்புக்குள் கொண்டு செல்வதை தடுத்து, மாநில அரசின் கீழ் தொடர்ந்து செயல்பட வலியுறுத்துவோம். இவற்றை முத்தரப்புக் குழுக்கள் மூலமே செயல்படுத்தவும், பதிவு செய்த தொழிலாளர்கள் பயன்பெறுவதற்கு தடையாக உள்ள நிபந்தனைகளை ரத்து செய்யவும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வற்புறுத்துவோம். நலவாரியங்கள் சிறப்பாக செயல்படவும், நலவாரிய கூட்டங்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடத்திடவும் வலியுறுத்துவோம்.

•             முறைசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு, புதுப்பித்தல், பணப்பயன்கள், ஓய்வூதிய விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக மட்டுமல்ல, நேரடியாகவும் விண்ணப்பிக்க வற்புறுத்துவோம்.

•             செஸ் மூலம் கிடைக்கும் நிதியை பயன்படுத்தும் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரியங்கள் தவிர மற்ற தொழில்வாரி நல வாரியங்களுக்கு நிதி உருவாக்கப்படவும், அதுவரை மாநில அரசு தேவையான நிதியினை ஒதுக்கி பணப்பயன்கள் தாமதமின்றி கிடைக்கவும் வழிவகை செய்ய பாடுபடுவோம்.

•             அமைப்புசாரா தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,  விபத்தில் இறக்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரு.5 லட்சம் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கப்பட வலியுறுத்துவோம். அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களையும் இஎஸ்ஐ திட்டத்தில் இணைக்கவும், தற்போது வழங்கப்பட்டு வரும் பணப்பயன்களை இரட்டிப்பாக்கவும் வலியுறுத்துவோம்.

•             பெண் தொழிலாளர்களுக்கு 55 வயது முதிர்விலும் ஆண் தொழிலாளர்களுக்கு 60 வயது முதிர்விலும் ஓய்வூதியம் ரூ. 5,000 மாதா மாதம்  வழங்கிட வலியுறுத்துவோம்.

•             கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் இயற்கை மரணத்திற்கு ரூ. 1 லட்சம் வழங்கிட வற்புறுத்துவோம்.

•             சுமைப்பணி, ஆட்டோ தொழில் உள்ளிட்ட தொழில்வாரி நலவாரியங்களை உருவாக்க வற்புறுத்துவோம்.

•             நலவாரிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி நிதி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்துவோம்.

30. ஆட்டோ

•             ஆட்டோ ரிக்ஷா தொழிலை முறைப்படுத்த மீட்டர் கட்டணத்தை அரசு தீர்மானிக்கவும், கேரளாவைப்போல் ஆட்டோ தொழிலாளர், பயணிகள், அரசு நிர்வாக பிரதிநிதிகளைக் கொண்ட முத்தரப்புக் குழுக்களை உருவாக்கவும், தனியார் ஆதிக்கத்தை தடுக்க அரசு தரப்பில் செயலி உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ள வற்புறுத்துவோம்.

•             பன்னாட்டு நிறுவனங்களான ஓலா, உபர், ரேப்பிடோ போன்ற நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வலியுறுத்துவோம்.

•             ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்கவும், புதிய ஆட்டோக்கள் வாங்க ரூ. 1 லட்சம் மானியம் வழங்கவும் வற்புறுத்துவோம்.

•             ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த கூடாது எனவும், ஆன்லைன் அபராதம் ரத்து செய்யவும் குரலெழுப்புவோம்.

•             ஆர்டிஓ அலுவலகத்தில் வழங்கப்படும் படிவங்கள் அனைத்தும் தமிழிலும் இருக்க வலியுறுத்துவோம்.

31. பயணிகள் மற்றும் சரக்கு வாகனம்

•             பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு மத்திய பாஜக அரசின் ‘மோட்டார் வாகன சட்ட திருத்தம் மூலம் ஆன்லைன் அதீத அபராதத்தை ரத்து செய்ய பாடுபடுவோம்.

32. கிக் தொழிலாளர்கள்

•             பல லட்சக்கணக்கான இளைஞர்கள் கிக் தொழிலாளர்களாக உள்ளனர்,  இவர்கள் எவ்வித சட்டப் பாதுகாப்புமின்றி பணியாற்றுகின்றனர், இவர்களை தற்போது உள்ள சட்ட வரம்பிற்குள் கொண்டுவரவும், இவர்களை தொழிலாளியாக அங்கீகரிக்கவும் வலியுறுத்துவோம்.

•             இத்தொழிலாளர்களின் குறைகள் உடனுக்குடன் தீர்த்திட, புகார்கள் அளித்திட எவ்வித ஏற்பாடும் இப்போது இல்லை. இவைகளை களைய கிக் தொழிலாளர்களின் குறை தீர்ப்பு கமிட்டிகளை அரசு மேற்பார்வையில் அமைத்திட வலியுறுத்துவோம்.

•             தற்போது உள்ள 10 அல்லது 12 நிமிட டெலிவரி என்கிற நடைமுறை விபத்துக்கள் ஏற்படவும் உயிருக்கு ஆபத்தானதாகவும் உள்ளது,  எனவே இந்நடைமுறையை ரத்து செய்து தொழிலாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்துவோம்.

•             பெண் ஆட்டோ தொழிலாளர்கள்/ ஜிக் தொழிலாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் ஓய்வறைகள் உரிய கழிப்பிட வசதிகளோடு ஏற்படுத்துவதை வலியுறுத்துவோம்.

33. தகவல் தொடர்பு துறை ஊழியர்கள்

•             ஏ.ஐ. தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சிறு நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள வசதியாக அரசு முதலீட்டில் டேட்டா மையங்கள் ஏற்படுத்தி, ஓபன் சோர்ஸ் ஏ.ஐ. மென்பொருட்களை நிறுவிக்கொள்ளவும், புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் அரசை வலியுறுத்துவோம். ஏ.ஐ. தொழில்நுட்பம் வேலைவாய்ப்பில் ஏற்படுத்தும் பாதகமான தாக்கங்களை ஆய்வு செய்து, தொழிலாளர் நல நோக்கில் ஏ.ஐ. தொழில்நுட்ப கொள்கை வகுத்திட வலியுறுத்துவோம்.

•             அலுவலக நேரத்திற்குப் பின் பணிசெய்ய நிர்பந்திக்கும் நடைமுறையைக் கைவிட, தொடர்பைத் துண்டிக்கும் உரிமையை பெற்றுத்தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தப்படும்.

•             வாரத்திற்கு ஐந்து நாட்கள் பணியும்,  நாளொன்றுக்கு 7 மணி நேர வேலை என்கிற அடிப்படையில் வேலை நாட்களைத் தீர்மானிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வற்புறுத்துவோம்.

•             செயல் திறன், மதிப்பீட்டு செயல்முறை, செயல்திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், பெஞ்ச் கொள்கைகள், ஆள் சேர்ப்பு மற்றும் பின்னணி  சரிபார்ப்பு, போன்றவைகளை சட்டப்பூர்வமாக ஒழுங்குபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்துவோம்.

•             நெறிமுறையற்ற பணியிட கண்காணிப்பைத் தடுக்கவும் ஊழியர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கவும் சட்டங்களை இயற்ற பாடுபடுவோம்.

•             எந்தவிதமான காரணமும் இன்றி கட்டாய பணி விலக்கலைத் தடுக்க இச்செயலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வற்புறுத்துவோம்.

•             இத்தொழிலாளர்களை தொழிலாளர் சட்ட வரம்பிற்குள் கொண்டுவர பாடுபடுவோம்.

•             பெண் ஊழியர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு அரசு அறிவித்துள்ளதை அமலாக்கிட வலியுறுத்துவோம்.

•             அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களிலும் குழந்தை காப்பக வசதிகளைக் கட்டாயமாக ஏற்படுத்திட வற்புறுத்துவோம்.

34. இ-சேவை ஊழியர்கள்

•             பல ஆண்டுகளாக அரசு இ சேவை மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கிடவும் அதுவரை குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26,000/- வழங்கிடவும் வலியுறுத்துவோம்.

•             இ சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மைய ஊழியர்களுக்கு பி.எப்,. இ.எஸ்.ஐ பிடித்தம் செய்திடவும்,  அரசு ஊழியர்களைப் போன்று விடுமுறை, போனஸ் போன்ற அனைத்தும் இத்தொழிலாளர்களுக்கும் கிடைத்திட வலியுறுத்துவோம்.

35. போதை மற்றும் மது எதிர்ப்பு

•             தமிழ்நாட்டில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்பட்டு, மது ஒழிப்பிற்கு தீவிர பிரச்சாரம் மேற்கொள்வது, குடி நோயாளிகள் சிகிச்சை மையங்கள் அதிகரிக்கப்படுவது, தமிழ்நாட்டில் உள்ள மது உற்பத்தி ஆலைகளின் உற்பத்திக்கு உச்சவரம்பு விதிப்பது போன்றவற்றை வலியுறுத்துவோம்.

•             போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள்,  உறுதுணையாக இருப்பவர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும். போதை எதிர்ப்பு பிரச்சாரம் நடத்திட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வோம்.

36. பெண்கள் நலன்

•             பெண்களுக்கு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் 33 சதவீதம் இடஒதுக்கீடு அமலாவதை விரைவுபடுத்த குரல் எழுப்புவோம்.

•             தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் செயல்பாடுகளை பலப்படுத்த உரிய அதிகாரங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பாலின சமத்துவம், சமூக அக்கறை கொண்ட  ஆணையமாக செயல்பட உகந்த சூழலை ஏற்படுத்தவும் வலியுறுத்துவோம்.

•             மாவட்டம் தோறும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் செயல்பாட்டை அதிகரிக்கவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தங்கும் விடுதிகளை அமைத்திடவும் வலியுறுத்துவோம்.

•             பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் ஒரே இடத்தில் அளிக்கும் மையங்களை (டிநே ளவடியீ உநவேசந)  முறையாக செயல்படுத்த வலியுறுத்துவோம். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் சாட்சிகளை பாதுகாக்க சட்டம் கொண்டு வரவும், காவலன் செயலியை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்வதையும் வலியுறுத்துவோம்.

•             அனைத்து மட்டங்களிலும் பாலின நிகர்நிலை பயிற்சி கொடுக்க வற்புறுத்துவோம். மக்கள் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் பெண்களை இழிவுபடுத்தும் செயல்களை நடத்தை விதிகள் (ஊடினந டிக ஊடினேரஉவ)  அடிப்படையில் குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.

•             நகரங்கள் தோறும் மகளிர் தங்கும் விடுதிகளை ஏற்படுத்துவதுடன் –குறைந்த கட்டணத்தில் செயல்படுத்தவும், பெண்களுக்கான தனி உடற்பயிற்சி கூடங்கள் அமைத்திடவும் வலியுறுத்துவோம்.

•             அனைத்துத் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்திட நிர்பந்திப்பதை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்க போராடுவோம்.

•             கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள், திருமணமாகாமல் தனித்து வாழும் பெண்கள் உட்பட நலிந்த பிரிவினருக்கு மாதம் ரூ 5,000/- உதவித் தொகை வழங்க போராடுவோம்.

•             ஊடகங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நுகர்வு பொருளாகச் சித்தரிக்கப்படுவதை அரசு தடை செய்யவும், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் அறிவியல் விரோத காட்சிகள், வசனங்கள், பாடல்கள் ஆகியவை மாற்றியமைக்கவும் குரலெழுப்புவோம்.

•             தமிழ்நாட்டில் பாலின பட்ஜெட் 33 சதவிகிதம் வரை உயர்த்தப்பட பாடுபடுவோம். ஒவ்வொரு திட்டச்செலவிலும் பெண்களுக்கான பங்களிப்பை உறுதி செய்ய உரிய ஏற்பாட்டை வலியுறுத்துவோம்.

•             குடியிருப்பு பகுதிகளில் அரசு குழந்தைகள் காப்பகம் அமைக்கவும் பி.சி & பி.என்.டி.டி (பாலின தேர்வின் அடிப்படையில் கருக்கலைப்பு செய்வதை தடுக்கும்  சட்டம்) சட்டத்தை முறையாக அமல்படுத்த மாவட்ட கண்காணிப்பு குழுக்களின் செயல்பாட்டைத் தீவிரப்படுத்தவும் வற்புறுத்துவோம். பெண்களின் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த சட்டப்படி நடவடிக்கை எடுக்க மறுக்கும் காவல்துறையினர் மீது பி.என்.எஸ். 199 – (ஐ.பி.சி 166-ஏ) பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். பெண்கள் மீதான வன்முறை வழக்குகளை 6 மாதங்களுக்குள் விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றங்களை  அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கிட வலியுறுத்துவோம்.

37. இளைஞர் நலன்

•             தமிழ்நாட்டில் இளைஞர் மேம்பாட்டு ஆணையம் அமைத்திட குரலெழுப்புவோம். சட்டமன்ற தொகுதி வாரியாக அரசு வேலை வாய்ப்பு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையங்களை அமைத்திடவும், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஏற்ப அரசு காலிப் பணியிடங்கள் அனைத்தையும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பிடவும் வலியுறுத்துவோம்.

•             குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வலியுறுத்துவோம்.

•             சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இளைஞர்கள், இளம் பெண்களுக்கான நகர்ப்புற வேலை உறுதி சட்டமியற்ற வலியுறுத்தப்படும். ஐகூ, ஹஐ, ளுவயசவ-ரயீ hரb-களிலும், இதர தொழிற்சாலைகளிலும் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதை உறுதி செய்வது, திறன் மேம்பாட்டு பயிற்சியினை ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து அரசு நிறுவனங்கள் மூலம்  கட்டாயமாக வழங்கிடவும் வற்புறுத்துவோம்.

•             டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை அமைத்திடவும்,  விவசாய பட்டதாரிகளுக்கு ஹபசi-ளுவயசவரயீ உதவி திட்டம் வழங்கிடவும் வற்புறுத்துவோம். தென் மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் ஐகூ யீயசமள அமைக்க போராடுவோம். தென் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை வழங்கும் சேது கால்வாய் திட்டத்தை அமலாக்க வலியுறுத்துவோம். இளைஞர்களின் நலன்களை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு திறன், உடற்பயிற்சி, பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கு நகர, கிராமப்புற பகுதிகளில் மையங்கள் அமைக்க வற்புறுத்துவோம்.

•             தமிழ்நாட்டில் வேலையில்லா கால நிவாரணத் தொகையை குறைந்தபட்சம் ரூபாய் 3,000/-ஆக உயர்த்தி வழங்கிட வற்புறுத்துவோம்.

38. வேலைவாய்ப்பு

•             அனைத்து அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்புவது, மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப அனைத்து துறைசார்ந்து புதிய பணியிடங்களை உருவாக்குவது, மேலும், இதுவரை உள்ள அனைத்து காலிப்பணியிடங்கள் குறித்தான புள்ளி விபரங்களை வெளியிடுவது, டி.என்.பி.எஸ்.சி., போன்ற அமைப்புகளை லஞ்ச – ஊழல் அப்பாற்பட்டு வெளிப்படையாக தேர்வுகள் நடத்துவது மற்றும் பணி நியமனங்கள் நடைபெறுவதை உறுதி செய்வது. மாவட்டந்தோறும் அரசின் சார்பில் வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களை அமைப்பது போன்றவற்றை வலியுறுத்துவோம்.

•             தமிழ்நாட்டின் சமூக அரசியல், பொருளாதார கட்டமைப்பை உள்ளடக்கி உள்ளூர் வளங்கள் சார்ந்து புதிய தொழில்களை  ஊக்குவிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது. வேலைவாய்ப்பில் அம்மாநில தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் வேலை வாய்ப்பை உறுதி செய்வது, தனியார் துறையில் இடஒதுக்கீட்டை அமலாக்குவது ஆகியவற்றை வலியுறுத்துவோம்.

39. குழந்தைகள் நலன்

•             குழந்தைகள் மற்றும் பெண்கள் நலனுக்கு என்று தனி அமைச்சகம் அமைக்க வலியுறுத்தப்படும்.

•             போக்சோ சட்டத்தை முறையாக அமல்படுத்தவும், வழக்குகளை விரைந்து நடத்திட அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்திடுவது, குழந்தைகளின் உரிமைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை நியமிப்பது. குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்க கிராம அளவிலான கண்காணிப்பு குழுக்களின் செயல்பாட்டை உறுதி செய்ய வலியுறுத்துவோம்.

•             குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த தனி அதிகாரிகள் நியமனம், பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்தான ஆபாச பதிவுகளை தடுப்பதற்கான சட்டத்தை கறாராக அமலாக்க பாடுபடுவோம்.

•             அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவ – மாணவியர்களுக்கு ஆலோசகர்கள் நியமிப்பது, குழந்தைகளுக்கான ஊட்டச் சத்து மையங்களை அதிகப்படுத்துவது, அதில் வழங்கப்படும் உணவின் தரத்தை உயர்த்துவது, குழந்தை தொழிலாளர் உழைப்பை முற்றிலும்  தடுத்து நிறுத்துவது என்பதை வலியுறுத்துவோம்.

40. மாணவர் நலன்

•             விடுதி மாணவ, மாணவிகளின் உணவுப்படி தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்துவோம். ஒன்றிய அரசு கைவிட்ட சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து விதமான கல்வி உதவி தொகையை வழங்கிட குரலெழுப்புவோம். பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்றம் செய்திட குரலெழுப்புவோம். கல்வி நிலையங்களில் நீதிபதி சந்துரு ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்த வற்புறுத்துவோம்.

•             மாணவர்களின் தனித்திறன் வளர்ச்சிக்கு தனித்த கவனம் செலுத்த வற்புறுத்துவோம். போக்சோ சட்டம் குறித்தான விழிப்புணர்வு கல்வி வளாகங்களுக்குள் தொடர்ச்சியாக முன்னெடுக்க வலியுறுத்துவோம். அனைத்து கல்வி நிலையங்களிலும் குடிநீர், தண்ணீருடன் கழிப்பறை, நாப்கின், சுற்றுச்சுவர், பாதுகாவலர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த போராடுவோம்.

•             அனைத்து கல்லூரிகள் பல்கலைக்கழகங்களிலும் தேர்தல் மூலம் மாணவர் பேரவைகள் அமைத்திட வற்புறுத்துவோம். மாவட்டம் தோறும் சட்ட கல்லூரிகள் உருவாக்கிட பாடுபடுவோம். தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில்  மாணவர் சேர்க்கையில்  ஒற்றைச் சாளர முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் (ளுiபேடந றiனேடிற ளுலளவநஅ). அனைத்துக் கலைக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி கட்டணங்களில் அரசு விதிகள் கடைப்பிடிக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.

•             காலை உணவுத் திட்டத்தை விரிவாக்குவதுடன், சத்துணவு திட்டங்களில் புரதச் சத்துமிக்க அசைவ உணவு வகைகள் வழங்கிட வலியுறுத்துவோம்.

•             உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை நிலைநாட்டும் ரோகித் வெமுலா சட்டத்தை அமலாக்க குரல் கொடுப்போம்.

41. கல்வி

•             புதிய தொழில்நுட்பங்கள், மென்பொருட்கள் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதத்தில் ஓபன்சோர்ஸ், கட்டற்ற மென்பொருள்/வன்பொருள் முறைகளை அரசு ஊக்குவிக்க வலியுறுத்துவோம். பள்ளி அளவிலேயே ஓபன் சோர்ஸ்/ கட்டற்ற மென்பொருள் – வன்பொருள் கல்வியை அறிமுகம் செய்திட கோருவோம்.

•             அனைத்து அரசு கல்வி நிறுவனங்களிலும் இலவச றகைi வசதி அமைத்து தர வலியுறுத்துவோம். பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் அறிவியல் ஆய்வுகள் அதிகரிக்கவும், ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் புதிய திட்டங்களுக்கு அறிவியல்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துவோம். அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை முழுமையாக வழங்கிட வற்புறுத்துவோம். அரசுக் கல்லூரிகள்,  அரசு உதவி பெறும் கல்லூரிகள் என பாகுபாடு இன்றி அனைத்துப் பேராசிரியர்களுக்கும் அனைத்து உரிமைகளும், ஊதிய பலன்களும் உரிய காலத்தில் வழங்க வலியுறுத்துவோம்.

•             யு.ஜி.சி. ஊதியம் பெறும் ஆசிரியர்களின் கல்வித்தகுதிக்கு இணையான கல்வித்தகுதி பெற்று, அவர்களுக்கு இணையாகப் பணியாற்றும் சுயநிதி கல்லூரி/பிரிவுகளில் பணியாற்றும்  ஆசிரியர்களுக்கென  தனிச்சட்டம் இயற்றி, அவர்களுக்கு யுஜிசி  பரிந்துரைக்கும் ஊதியம், பணிப்பாதுகாப்பினைப் பெற்றிட வலியுறுத்துவோம். அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்,  பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பணி நியமனங்களுக்கு தனித்தனியாக நியமன ஆணையம் அமைக்க வற்புறுத்துவோம்.

•             மாநிலப் பல்கலைக்கழகங்களின்  தன்னாட்சி பாதுகாக்கப்பட வேண்டும்.  கொள்கை சார்ந்த விஷயங்களில் ஒன்றிய அரசின் தலையீடுகளை தடுக்க வேண்டும். பல்கலைகழக துணைவேந்தர் நியமனங்களில், தேர்வுக்குழுவில் கல்லூரி ஆசிரியர்கள் இடம்பெறவும், துணைவேந்தர்களாக நியமிக்கப்படவும் சட்டத்திருத்தம் செய்ய வலியுறுத்துவோம். பல்கலைக்கழக ஆட்சிக்குழுவில் அரசு/ அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் இடம்பெற, தொகுதி ஒதுக்கீடு செய்ய சட்டத்திருத்தம் செய்ய வலியுறுத்துவோம்.

•             கேரளாவைப் போல் அரசு ஆரம்பப்பள்ளிகளை வலுப்படுத்தி, தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்துவோம்.

•             நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு, மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் சமூக நீதி அமலாக்கம் போன்றவற்றிற்காக சட்ட ரீதியிலும், அரசியல் ரீதியிலும் அழுத்தம் தருவோம்.

42. சுகாதாரம்

•             தமிழ்நாட்டில் இறுதி செய்யப்பட்டுள்ள நல்வாழ்வு கொள்கைக்கான வரைவு அறிக்கையை இறுதிப்படுத்தி வெளியிடுவது. நல்வாழ்வுத் திட்டங்களில் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசு – தனியார் கூட்டுக் கொள்கை (ஞஞஞ) திட்டங்களை கைவிட வற்புறுத்துவோம்.

•             தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான முழுமையான இலவச மருத்துவ சேவைகளை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு மருத்துவ சேவை உரிமைகள் (சுiபாவ வடி ழநயடவா ஊயசன ஹஉவ) சட்டம் உருவாக்கப்பட வேண்டும். மாநில மொத்த உற்பத்தியில் 8 சதவிகிதம் நல்வாழ்விற்கு ஒதுக்குவது அதில் 50 சதவிகிதம் ஆரம்ப சுகாதார பராமரிப்பிற்கும் ஒதுக்குவது வலியுறுத்தப்படும். அரசு மருத்துவமனைகள் நவீனமயமாக்கம், அத்தியாவசிய மருந்துகள், பரிசோதனைகள் தொடர்ந்து இலவசமாக கிடைக்கவும், மன நல சேவைகள் விரிவாக்கம், நாள்பட்ட நோய்கள் கண்காணிப்புத் திட்டங்களை வலுப்படுத்த முயற்சி செய்வோம்.

•             தமிழகத்தில் சுகாதாரமான குடிநீர் இலவசமாக வழங்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துவோம்.

•             ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி புதிய மருத்துவ கல்லூரிகள் வரை போதுமான பணியாளர்கள் நியமிக்கப்படல், அதற்கேற்ப அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்படல், இரண்டாம் நிலை மருத்துவமனைகளிலும் சிறப்பு மருத்துவர்கள் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படல், கிராமப்புற மக்கள் பயனுறும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயன்முறை மருத்துவர் நியமனங்கள் உறுதி செய்யப்படல் ஆகியவற்றை தொடர் வலியுறுத்தல்கள் வாயிலாக உறுதி செய்வோம்.

•             ஒன்றிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகளில் தேவையான ஸ்கேன், கதிரியக்க நிபுணர் நியமிக்கப்படவும்,  மகப்பேறு சேவைக்கு மேலும் வலுசேர்க்கவும் முயற்சிகளை மேற்கொள்வோம்.

•             அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற காப்பீடு அட்டை தேவையில்லை என அறிவிக்கப்பட வலியுறுத்துவோம். அரசு மருத்துவமனைகளில் கட்டண வார்டு, தனியாருடனான கூட்டு ஆகியவை கைவிடப்பட தொடர் வலியுறுத்தல்களை செய்வோம். புதிதாக எந்த அரசு மருத்துவமனையின் மருத்துவ சேவையும் தனியாருக்கு வழங்கப்படக் கூடாது, தனியார் மருத்துவமனைகள் காப்பீடு திட்டங்களின் வழியாக வழங்கும் சேவைக்கான கட்டணங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வெளிப்படையாக காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவோம். தூத்துக்குடி, திருப்பூர், கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் அரசுகளின் நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி முழுதிறனோடு செயல்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்துவோம்.

•             அரசு மருத்துவமனைகளில் ஹெச்.ஐ.வி., காசநோய், மனநலம் போன்ற அனைத்து நோய்களுக்கும், அனைத்து நாட்களிலும் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய தொடர் கவனம் செலுத்துவோம்.  மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தை, மனநலம் சார்ந்த பணிகளுக்கும் விரிவுப்படுத்தி ஊழியர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்பட வலியுறுத்துவோம்.

•             திருமண வயதுக்கு முந்தைய திருமணம், கர்ப்பம் தரித்தல், குடும்ப வன்முறை அதிகரிப்பு, பாலியல் வன்முறை ஆகியவை பொது சுகாதார பிரச்சனையாக கருதப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல சேவைகள், சட்ட உதவிகள் வழங்கப்படுவதையும், பெண்களை உள்ளடக்கிய நல்வாழ்வு குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுவதையும் உறுதி செய்வோம்.

•             மாவட்ட சுகாதார பேரவை மேம்படுத்தப்படல், அங்கன்வாடி மூலமாக கர்ப்பிணி பெண்கள், வளரிளம் பெண்களுக்கான செயல்பாடுகள் மேம்படுத்தப்படல், குழந்தைகளுக்கான வளர்ச்சி செயல்பாடுகள் தீவிரமாக கண்காணித்து அமலாக்கப்படல் ஆகியவற்றை வலியுறுத்துவோம். மாதவிடாய் சுகாதாரம் உறுதிப்படுத்தப்படவும், மாதவிடாய் விடுப்பு வழங்கப்படவும் வலியுறுத்துவோம்.

43. பொது விநியோகம்

•             அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை வழங்கும் பொது விநியோகத் திட்டத்தை பலப்படுத்துவது அவசியம். அனைத்து அத்தியாவசியப் பொருட்களை மலிவு விலையில் விற்பனை செய்வது வெளிச்சந்தை விலையை கட்டுப்படுத்த உதவும்.  இலக்கு வைக்காத, அனைவருக்குமான பொது விநியோக திட்டத்தை சிதைப்பதற்கான ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை வலுவாக எதிர்ப்போம்.   மாநிலங்களின் தேவைக்கேற்ப மானிய விலையில் உணவு தானியங்கள்   வழங்குவதை வலியுறுத்துவோம்.

•             கேரள மாநிலத்தைப் போல் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொது விநியோகத் திட்டத்தை 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அமலாக்கிட வலியுறுத்துவோம்.

44. சுற்றுச்சூழல்

•             மக்கள் குடியிருக்கும் பகுதிகள் அருகில் ரசாயனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் அமைப்பதை தடை செய்ய வலியுறுத்துவோம். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வற்புறுத்துவோம்.

•             சென்னையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு என தனியாக ‘சிறப்பு சூழலியல்’ திட்டத்தை உருவாக்க வலியுறுத்துவது. சென்னை உள்ளிட்டு பெரு மற்றும் சிறு நகரங்களில் பறவைகள் சரணாலயங்கள் அமைப்பது என்கிற பெயரில் அருகாமையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை அப்புறப்படுத்துவதைத் தடுத்து நிறுத்த போராடுவோம்.

•             குவியும் குப்பைகளுக்கு இயற்கை சார்ந்த அறிவியல்பூர்வமான மாற்றுத் திடக்கழிவு  மேலாண்மை திட்டங்களை உருவாக்க கவனம் செலுத்துவோம். உயிரி வாயு (பயோ கேஸ்) மற்றும் பயோ சி.என்.ஜி. மையங்களை உருவாக்கி ஈரக் கழிவுகளை வளமாக்க முடியும். இதற்கான சிறப்புத் திட்டங்களை உருவாக்க வலியுறுத்துவோம்.

•             முக்கிய பெருநகரங்களில் சுற்றுச்சூழல் பூங்காக்கள் உருவாக்கிடுவது. (நுபடி ஞயசம) மேலும், குரூப் 1, குரூப் 2 தேர்வு எழுதுபவர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் அமைத்திட வற்புறுத்துவோம்.

•             சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மழைநீர் வடிகால் அமைப்பை தொடர் பராமரிப்பிற்கு உட்படுத்துவது. நீர்வரத்துப் பாதைகளை முறையாக தூர்வாரி பராமரிப்பது. குறுகலான பகுதிகளில் அரசு நிலங்களில் குளங்கள், கிணறுகள் போன்ற அமைப்பை உருவாக்கி நிலத்தடி நீரை மேம்படுத்த மழைநீர் சேகரிப்பிற்கான சிறப்பு திட்டங்களை உருவாக்க வலியுறுத்துவோம்.

45. இலங்கை தமிழர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்

•             ஒன்றிய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டமானது, குடியுரிமையில் மதத்தை புகுத்தும் நோக்கம் கொண்டது. மேலும், இலங்கை தமிழர்களை வேண்டுமென்றே சேர்க்க மறுத்தது. அதற்கு ஆதரவாக அதிமுக, பாமக வாக்களித்தன. இலங்கை தமிழர்களையும் உள்ளடக்கிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவருவதன் மூலம் மதப் பாகுபாட்டுக்கு முடிவுகட்டுவதுடன், இலங்கை தமிழர் நலன் காக்க முன்னிற்போம்.

•             தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் கோரினால், குடியுரிமை வழங்கிட தொடர்ந்து குரலெழுப்புவோம்.

•             அண்டடை நாடான இலங்கையில் தமிழ் மக்கள் வாழ்வுரிமையை பாதுகாத்திடவும், அம்மக்கள் அச்சமின்றி வாழ்ந்திட தேவையான அரசியல் சட்டப் பாதுகாப்பினை வழங்கிட தொடர்ந்து வலியுறுத்துவோம்.

•             இன்றைய உலகமயச் சூழலில் பல்வேறு நாடுகளில் தமிழக இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து அவர்களது அறிவுசார் பங்களிப்பை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்ய வலியுறுத்துவோம்.

46. அகதிகள் முகாம்:

•             இலங்கை வாழ் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட தொடர்ந்து குரல் கொடுப்போம். தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மேம்படுத்தப்படவும், இலங்கை தமிழர் அகதிகளின் குழந்தைகள் கல்வி பெறுவதிலும், வேலைவாய்ப்பு பெறுவதிலும் உரிய கவனம் செலுத்திடவும் குரலெழுப்புவோம்.

47. போக்குவரத்து

•             அரசு போக்குவரத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிடவும், போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தவும்  வலியுறுத்துவோம்.  சேவைத்துறை என்ற அடிப்படையில் போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிட அரசை நிர்பந்திப்போம்.          

•             போக்குவரத்துக் கழகங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரப் பேருந்துகள், இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிப்பொருட்களை பயன்படுத்தி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். அப்படி இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தையும்  ஒப்பந்த முறைக்குப் பதிலாக நிரந்தர ஊழியர்களை வைத்து இயக்க வலியுறுத்துவோம்.

•             நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வரன்முறைக்குட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதுடன், ஆண்டுக்கு ஆண்டு உயர்த்தப்படும் நடைமுறைக்கு எதிராகவும் குரல்கொடுப்போம்.

48. எரிசக்தி

•             தமிழ்நாடு மின்சார வாரியம் சேவைத் துறையாக, பொதுத் துறையாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க பாடுபடுவோம். மின்சார சட்ட திருத்த மசோதா 2025 ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு அதற்கு எதிராக போராடி மாநில உரிமையை பாதுகாப்போம்.

•             விவசாயிகள், கைத்தறி மற்றும் நெசவு தொழிலுக்கு இலவச மின்சாரமும், ஒரு விளக்கு திட்டம், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரமும் தொடர்ந்து கிடைத்திட பாடுபடுவோம்.

•             தமிழகத்தின் மின் தேவையை கருத்தில் கொண்டு நீண்ட காலமாக நடைபெற்று வரும் மின் உற்பத்தி திட்டங்களை உடனடியாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பாடுபடுவோம். மரபு சாரா எரிசக்தி மூலம் காற்று, சூரிய சக்தி உள்ளிட்டவை மூலம் மின் உற்பத்தியை பலப்படுத்தவும், விரிவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்வோம்.

•             வீடுகள் கடைகள் வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் சூரிய ஒளி சக்தி மூலம் மின்சாரத்தை அவர்களே உற்பத்தி செய்வதற்கு மானியம் பெற்று தர நடவடிக்கை எடுப்போம்.

•             ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ஊயயீவையட நஒயீநனேவைரசந முறையில் அரசின் பொறுப்பில் மின்வாரியமே செய்திட வலியுறுத்துவோம். அணுமின் உற்பத்தியை  தனியாருக்கு கொடுக்கும் சட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்போம்.

49. பொதுத்துறை பாதுகாப்பு

•             தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறைகளைப் பாதுகாப்பதுடன் அவற்றை லாபகரமாக இயக்குவதன் மூலம் விரிவுபடுத்தவும், புதிதாக வளரும் துறைகளில் பொதுத்துறைகளை உருவாக்கவும் – அதன் மூலம் வேலைவாய்ப்பில் சமூக நீதியை விரிவாக்கிடவும் வலியுறுத்துவோம்.

•             இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் காலங்களில் இந்திய பொருளாதாரத்தை பாதுகாப்பது பொதுத்துறைகள் தான்,  இத்துறைகளை இன்றைய அரசு வேகமாக தனியாரிடம் ஒப்படைக்க பெரும் முயற்சிகளை மேற்கொள்வதை தடுத்துநிறுத்திட எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

•             குறிப்பாக, இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் 100 சதமானம் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்திருப்பதை ரத்து செய்ய பாடுபடுவோம்.

•             தேச உடமையாக்கப்பட்ட வங்கிகள் தனியார்மயமாக்கலையும், வங்கிகள் இணைப்பையும் எதிர்த்து வலுவாக போராடுவோம்.

•             சேவை துறையாக உள்ள ரயில்வே துறையை தனியார்மயமாக்க எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்துசெய்து அரசு துறையாகவே நீடிக்க போராடுவோம்.

•             புதிய மின்சார சட்டம் என்கிற பெயரில் மின்துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட போராடுவோம்.

•             மாநில பொதுத்துறை நிறுவனங்கள் நலிவடையும் போது, கேரளாவைப் போல், மாநில அரசே அவற்றை மேம்படுத்தி நடத்திட குரல் கொடுப்போம்.

50. நகர்ப்புற வளர்ச்சி

•             பெரும் கார்ப்பரேட் நலன்களுக்கான நவீன தாராளமய நகர்மயமாதல் கொள்கைகளை எதிர்த்து தொடர்ந்து கண்டனக் குரல் எழுப்புவோம்.

•             ‘நகர்ப்புற வளர்ச்சி’ என்பது வெறும் அடுக்குமாடி குடியிருப்புகளோ அல்லது பொலிவுறு நகரங்களோ (ளுஅயசவ ஊவைநைள) மட்டுமல்ல; அது உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும், அடிப்படை வசதிகளையும் மையமாகக் கொண்டிருக்க வேண்டும். நகரங்களை உருவாக்கிய உழைக்கும் மக்களின் வாழ்வாதார நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து, நகர்ப்புற உழைக்கும் மக்களின் குரலாக செயல்படுவோம்.

•             எளிய மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றி பொது சேவைகளுக்கான நிதி ஆதாரத்தை திரட்டும் முயற்சிகளை எதிர்ப்போம். ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வு, அபராத கட்டண வசூல், பயனாளர் கட்டணங்கள், கடுமையான குடிநீர் வரி, குப்பை வரி  போன்ற அனைத்தையும் எதிர்த்துக் குரல் கொடுப்போம்.

•             விரிவடையும் நகர்ப்புறங்கள், பெருகிவரும் நகர்ப்புற மக்கள் தொகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சுகாதாரம், கல்வி, அனைவருக்கும் வீட்டு வசதி, வாடகையில் குடியிருப்போர் தேவைகள், சாலைப் போக்குவரத்து, கழிப்பிட வசதிகள், பாதாளச் சாக்கடை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அடிப்படைக் கட்டமைப்பு வசதி என அனைத்திலும் மாற்றுக் கொள்கைகளை முன்னிறுத்துவோம்.

•             நகர்ப்புற ஏழைகள் மற்றும் குடிசைவாழ் மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலேயே அல்லது அருகிலேயே பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான குடியிருப்புகளை உறுதி செய்வோம். எக்காரணம் கொண்டும் வாழ்விடத்தை விட்டு வெகுதூரம் மக்களை அப்புறப்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம். வீடு, மனைப்பட்டா மற்றும்  குடியிருப்பு வசதிக்கான கோரிக்கைகள் அத்தனையும் நிறைவேற்றுவதற்கான இயக்கங்களை முன்னெடுத்து மக்களின் வாழ்விட உரிமையை பாதுகாப்போம். வீட்டுமனை அங்கீகாரம் பெற ஒற்றைச்சாளர முறையை கொண்டு வர வலியுறுத்துவோம்.

•             சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் திட, திரவக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை வற்புறுத்துவோம். குப்பைகளை வகைபிரித்து மறுசுழற்சி செய்யும் நவீன முறைகளை அனைத்து மாநகராட்சிகளிலும் அமல்படுத்த வலியுறுத்துவோம்.

•             மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை (ருசயெn ஞழஊள) நவீனப்படுத்தி, தரமான இலவசக் கல்வி மற்றும் மருத்துவத்தை உறுதி செய்வோம்.

•             சைக்கிள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோருக்கான தனிப் பாதைகளை உருவாக்குவோம். பூங்காக்கள், உள்விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொது நூலகங்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கி, நகரங்களைச் சூழலியல் ரீதியாக மேம்படுத்துவோம். கலை அரங்கங்கள் மற்றும் நவீனப்படுத்தப்பட்ட விளையாட்டு அரங்கங்கள் உருவாக்க வலியுறுத்துவோம்.

•             குறைந்த கட்டணத்தில் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து, சாதாரண மக்களுக்கான  தரமான போக்குவரத்தை உறுதி செய்ய வலியுறுத்துவோம்.

•             உள்ளூர் நீர்நிலைப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, நகரங்களில் உள்ள ஏரி, குளங்களைத் தூர்வாரி  நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், மழைநீர் சேகரிப்பை உறுதி செய்திடவும் முயற்சிப்போம்.

•             அடையாறு ஆற்றை சீரமைக்கவும், கழிவு நீரை சுத்திகரித்து ஆற்றில் விடவும் ரூ. 1500 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அப்பகுதி மக்களின் கருத்தறிந்து நிறைவேற்றிட வலியுறுத்துவோம்.

•             புறநகர் பகுதிகளில் கழிவு நீர் வெளியேற்றத்தால் ஏற்படும் நிலத்தடி நீர் பாதிப்பை தடுப்பதற்கு குறைந்தபட்சம் 1200 சதுர அடிக்கும் அதற்கும் மேலும் உள்ள குடியிருப்புகளில் கழிவுநீரை சுத்திகரித்து வெளியே விடும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை உருவாக்க வலியுறுத்துவோம்.

•             சென்னை மெட்ரோ விரிவாக்கம் – 2, மதுரை, கோவை மெட்ரோ திட்டம் போன்றவற்றிற்கு முறையாக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதை வலியுறுத்துவோம். மெட்ரோ ரயிலில் சீசன் டிக்கெட் முறையை கொண்டு வர வேண்டும். மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயில், பேருந்துகளுக்கு ஒருங்கிணைந்த பயணச் சீட்டு திட்டம் கொண்டு வரப்பட குரல்கொடுப்போம். மெட்ரோ சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் மின்சாரப் பேருந்து வசதிகளை மேம்படுத்துவது ஆகியவற்றுடன் நகர்ப்புற உழைக்கும் மக்களின் போக்குவரத்துத் தேவைகளை கருத்தில் கொண்டு சாலை வசதிகளையும் மேம்படுத்துவோம். சென்னை புறநகர் ரயில் சேவையில் கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் தனியாக புதிய இருப்புப்பாதை அமைத்து கூடுதல் ரயில்களை இயக்க வலியுறுத்துவோம்.

51. உள்ளாட்சி

•             கிராமப்புற மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி நிதி மற்றும் கூடுதல் அதிகாரம் வழங்கிடவும், கிராம சபை கூட்டங்கள் மக்கள் பங்கேற்புடன் ஆக்கப்பூர்வமாக நடத்திட வலியுறுத்துவோம். கிராமங்களில் மக்களின் தேவையறிந்து திட்டங்கள் செயல்படுத்திட வலியுறுத்தப்படும்.

•             உள்ளாட்சி அமைப்புகளின் வரவு-செலவுகளை கிராமசபை கூட்டங்களில் சமூக தணிக்கைக்கு உட்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்துவோம். உள்ளாட்சி அமைப்புகளுக்கு பட்ஜெட்டில் 30 சதவிகிதம் நிதி  ஒதுக்கீடு செய்ய வற்புறுத்துவோம்.

•             உள்ளாட்சிகளில் செயல்படும் ஊராட்சி செயலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் குடிநீர் மோட்டார் இயக்குனர்கள் முழுநேர பணியாளர்களாக்கி நிரந்தரப்படுத்திட குரலெழுப்புவோம்.

•             உள்ளாட்சி தேர்தலை உரிய காலத்தில் நடத்திட குரலெழுப்புவோம்.

•             ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியமர்த்தப்படும் துப்புறவு பணியாளர்களுக்கு சட்டப்படியான ஊதியம் வழங்கிடவும், குடிநீர் விநியோகம் தனியாரிடம் ஒப்படைக்காமல் உள்ளாட்சி நிர்வாகங்களின் மூலம் வழங்கிடவும் வலியுறுத்துவோம்.

52. நிலம் மற்றும் குடிமனைப் பட்டா

•             நகர்ப்புற வளர்ச்சிக்கேற்ப நிலவகைகளில் மாற்றம் செய்யாததால் லட்சக்கணக்கான மக்கள் குடிமனைகளுக்கு பட்டா பெற முடியாத நிலை உள்ளது. குடியிருப்பு உத்தரவாதம், குடிமனைப் பட்டா என்பது நகர வளர்ச்சியின் அடிப்படையாகும், மக்களின் உரிமையாகும்.

•             கிராம நத்தம், நத்தப்புறம்போக்கு நிலங்களில் மக்களுக்கு பட்டா வழங்கும் அரசாணை தொடர வேண்டும். மாநகர, நகர பகுதிகளில் இலவச குடிமனைப் பட்டா வழங்குவதை உறுதி செய்ய வலியுறுத்துவோம். மற்ற வகை புறம்போக்குகளையும் வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வற்புறுத்துவோம்.

•             கிராமப்புறங்களில் உள்ள நிலமற்ற ஏழை விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு குடும்பத்திற்கு தலா 1 ஏக்கர் நிலம் வழங்க குரெலழுப்புவோம்.

•             அரசு ஆவணங்களில் ஆட்சேபகரமான நிலங்கள் என பட்டியலிடப்பட்டுள்ள மேய்க்கால், வாய்க்கால், ஓடை, தாங்கல், ஏரி, நீர்நிலை மற்றும் நீர்ப்பிடிப்பு என உள்ளதை தற்போதைய நிலை குறித்து ஆய்வுகள் செய்து மறு வகைப்பாடு செய்து நீர்நிலைகளுக்கு பாதிப்பின்றி அனைத்துப் பகுதி மக்களுக்கும் பட்டா வழங்கிட வலியுறுத்துவோம்.

•             தனியார் தோட்ட நிலங்கள் மற்றும் அரசின் சார்பில் அகதிகள் மறுவாழ்விற்காக வழங்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் நீண்ட காலம் ஏழை, எளிய மக்களினுடைய அனுபவத்திலிருந்து வரும் நிலங்களுக்கும் அரசே அனாதீனம் என்று நிலத்தை எடுத்து குடியிருக்கும் மக்களுக்கு இலவசப் பட்டா வழங்க வற்புறுத்துவோம்.

53. நுண் நிதி நிறுவனங்கள்

•             நுண்நிதி நிறுவனங்களின் அத்துமீறல்களை தடுப்பதற்குக் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்திற்கான விதிமுறைகளை உடனடியாக உருவாக்கி அதனை அமலுக்கு கொண்டு வர பாடுபடுவோம்.

•             இது குறித்த விழிப்புணர்வைப் பெண்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு சிறப்பு முயற்சிகளை எடுக்க வைப்பது, உதவி எண் அல்லது செயலியைக் கொண்டு வர வற்புறுத்துவோம்.

•             குறைந்த வட்டியில் கூட்டுறவு வங்கி மற்றும் அரசு சார் கடன் உதவிகளை செய்வதன் மூலம் நுண்நிதி நிறுவனங்களின் கடன் வலைப் பின்னலில் இருந்து எளிய மக்களை விடுவிக்க போராடுவோம்.

54. கூட்டுறவு இயக்கம்

•             இந்தியாவில் கூட்டுறவு செயல்பாட்டிற்கு  தற்போது அமலாக்கப்பட்டு வரும்  தாராளமய கொள்கை, தேசிய பணமாக்கல் திட்டம் பெரும் சவாலாக உள்ளது.  இன்றைய முதலாளித்துவ கட்டமைப்பில் முதலாளித்துவ கேடுகள் கூட்டுறவை செல்லரிக்க வைத்துள்ளது. மேலும், கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்தி கூட்டுறவுக்கான தனி அமைச்சகத்தை உருவாக்கி உள்ள மோடி அரசின் நடவடிக்கைகயை எதிர்த்து குரல் கொடுப்போம்.

•             மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கூட்டுறவுகளை சீர்குலைத்து, ஒட்டுமொத்த நிதி ஆதாரங்களை மடை மாற்றம் செய்வதற்கான ஒன்றிய அரசின் முயற்சிகளை முற்றிலுமாக நிராகரிப்போம்.

•             மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து கேரளத்தைப் போல் “தமிழ்நாடு வங்கியை” உருவாக்க வலியுறுத்துவோம்.

•             தமிழக மக்களுக்கான பயிர்க் கடன், சிறு வணிகக் கடன், வேளாண் சாராத கடன், கைத்தறி – விசைத்தறி, பால் உற்பத்தியாளர்கள் கடன், சமூக நலத்துறையின் மூலமாக  மகளிர் தொழில் கூட்டுறவுகள் மூலமாக நடுத்தர ஏழை மக்கள் பயன்படக்கூடிய அளவில் கடன் வசதிகள், சிறு-குறு தொழில் முனைவோருக்கான கடன், சாலையோர வியாபாரிகள், பெட்டிக்கடை வைத்திருப்போர், பூ, பழம் , காய்கறி விற்பனையாளர்கள், மீன்பிடி தொழில் மற்றும் கைத்தொழில் ஈடுபட்டுள்ளவர்கள் பயன்பெறும் வகையில் கடன் வழங்குவதை எளிமைப்படுத்தி விரைந்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க அரசை  வலியுறுத்துவோம்.

•             ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது இடதுசாரிகளால் கொண்டுவரப்பட்ட  97வது அரசமைப்பு சட்ட திருத்தத்தின் அடிப்படையில்  ஜனநாயகப் பூர்வமான கூட்டுறவு தேர்தலை  நடத்த  வலியுறுத்துவோம்.

55. கூட்டுறவு ஊழியர்கள் நலன்

•             கூட்டுறவு பஞ்சாலைகள் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள தினக்கூலி தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெற்று வரும் ஊழியர்களையும், பணி வரன்முறைப் படுத்தாத அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்திட குரல் எழுப்புவோம்.

•             போனஸ் சட்ட விதி 97ல் போனஸ் சட்டத்திற்கு நிகராக வழங்க உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துவோம்.

•             அரசு ஊழியர்களுக்கு இணையான மருத்துவக் காப்பீடு திட்டத்தையும் குடும்ப நல நிதி திட்டத்தையும் அமலாக்கிட வலியுறுத்துவோம். அனைத்து வகை கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த வருங்கால வைப்பு நிதி திட்டம், குழு காப்பீடு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கருணை ஓய்கூதியத் திட்டத்தை அமலாக்கிட வலியுறுத்துவோம்.

•             கூட்டுறவு அமைப்புகளில் பல்லாண்டு காலமாக பணிபுரிந்து வரும் ஊழியர்களின் பணி வரன்முறைப்படுத்தவும், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் கிடைக்க குரல் கொடுப்போம்.

56. மனித உரிமைகள்

•             மனித உரிமைகள் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிற காலம் இது. காவல் மரணங்கள், காவல் நிலைய துன்புறுத்தல்கள், சட்டவிரோதமான அணுகுமுறைகள் ஆகியனவற்றை தடுத்து நிறுத்த வலியுறுத்துவோம். காவல் நிலைய அத்துமீறல்கள் குறித்த புகார்கள் மீது விரைவான நடவடிக்கை உறுதி செய்ய பாடுபடுவோம். நீதிமன்றக் காவலுக்காக குற்றவியல் நடுவர் முன்பு நிறுத்தப்படுவோருக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைக்கு “நெறிகள்” உருவாக்கப்பட்டு அவை பின்பற்றப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென வற்புறுத்துவோம்.

•             மனித உரிமை ஆணையம், குழந்தைகள் உரிமை ஆணையம், சிறுபான்மையினர் ஆணையம், தகவல் உரிமை ஆணையம், மகளிர் ஆணையம் ஆகியவற்றிலுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் உறுதி செய்ய வலியுறுத்துவோம். நியமனங்கள் குறுகிய அரசியல் நோக்கில் அமையக் கூடாது. மேற்கண்ட ஆணையங்களுக்கு நிதி ஒதுக்கீடு உரிய அளவில் உறுதி செய்யப்பட வற்புறுத்துவேம்.

•             அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மனித உரிமைக் கல்வியை உறுதி செய்யவும், மாவட்டந்தோறும் மனித உரிமை சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கிடவும் வற்புறுத்துவோம். மனநலக் காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் உள்ளிட்டவை ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு அங்கு மனித உரிமை மீறல்கள் இல்லாமலிருப்பதை உறுதி செய்ய வற்புறுத்துவோம்.

•             சிறையில் மனித மாண்புகள் காக்கப்பட வேண்டும். சிறைவாசிகளின் எண்ணிக்கை, உணவு அடிப்படைத் தேவைகள், உள்ளிட்டவை கணக்கிற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்துவோம்.    விசாரணை இல்லாமல் பல ஆண்டுகள் சிறையில் வாடும் கைதிகளின் வழக்குகள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அவற்றை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்துவோம்.

57. அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் நலன்

•             தமிழ்நாடு பயன் வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்தவும், 10 சதவிகித பிடித்தத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நோக்கி பயணித்திடவும் வற்புறுத்துவோம்.

•             தேசிய கல்விக் கொள்கை 2020 தமிழ்நாட்டில் நேரடியாகவோ,  மறைமுகமாகவோ அமல்படுத்தாமல் இருக்க வலுவாக குரெலழுப்புவோம்.

•             இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மத்தியில் நிலவும் ஊதிய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் நிலுவையுடன் வழங்கிட வலியுறுத்துவோம்.

•             தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின், குறிப்பாகப் பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பினைப் பறிக்கும் வகையிலும், ஊட்டுப்பதவிகளில் மாற்றம் செய்து 1,00,000 தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வைப் பாதிக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243ஐ முற்றிலும் ரத்து செய்திட குரலெழுப்புவோம்.

•             தமிழ்நாடு அரசு,  50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை, விடுபட்ட காலத்திலிருந்து மீண்டும் வழங்கிட வற்புறுத்துவோம்.

•             தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வலியுறுத்துவோம்.

•             அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் மற்றும் சலுகைகளை அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிட பாடுபடுவோம்.

•             அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு ஊதியம் (ஊஹளு)  மற்றும் நிலுவை தொகை முழுமையாக வழங்கப்பட குரல் கொடுப்போம்

•             சுயநிதி கல்லூரிகள்/ பிரிவுகளுக்கென தனிச்சட்டம் இயற்றி ஆசிரியர்களின் பணி மற்றும் ஊதிய பாதுகாப்பை உறுதி செய்ய வற்புறுத்துவோம்

•             யுஜிசி வழிகாட்டுதல் மற்றும் நீதிமன்ற தீர்ப்பின்படி கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்குக் குரல் கொடுப்போம்.

58. ஓய்வூதியர் நலன்

•             10 சதவிகிதம் பிடித்தத்தை கைவிடவும்,  ஓய்வூதிய திட்டத்தை மாநில பொதுத்துறை நிறுவனங்களான மின்சாரம் போக்குவரத்து போன்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அளித்திட வேண்டி வலியுறுத்துவோம்.

•             தமிழகத்தில் உள்ள அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குறிப்பாக போக்குவரத்து மின்சாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளில் ஓய்வு பெற்றவர்களுக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதிய பலன்கள் அமைப்பதற்கு பாடுபடுவோம்.

•             அரசு அறிவித்துள்ள மருத்துவ திட்டத்தை யுனைடெட் இந்தியா நிறுவனத்தின் மூலம் வழங்காமல் அந்தந்த நிறுவனங்களே வழங்கிட வலியுறுத்துவோம்.

•             ஓய்வூதியர் இறந்த பின்னரும் அவரது கைம்பெண் மகள், விவாகரத்தான மகளுக்கும்  குடும்ப ஓய்வூதியம் வழங்கிட பாடுபடுவோம்.

59. மீனவர் நலன்

•             தமிழக – இலங்கை மீனவர்களிடம் சுமுக உறவை உருவாக்க ஆண்டுக்கு இருமுறை தமிழக அரசும் பங்கேற்கும் விதத்தில் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தப்படும்.

•             60 வயது கடந்த மீனவர்களுக்கு மீனவர் வாரியம் மூலம் மாதம் ரூ.3000/- ஓய்வூதியம் வழங்க வலியுறுத்துவோம்.

•             மீனவர்களை கடற்கரை வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தும் கடலோர மேலாண்மை மண்டல அறிவிப்பு ஆணையை ரத்து செய்யவும், சுற்றுலாவை மேம்படுத்துவது என்ற பெயரில் சென்னை கடற்கரையில் தனியார்  கேளிக்கைகளை அனுமதிக்கும் முடிவை திரும்பப் பெறவும் வலியுறுத்தப்படும். கடலோர பகுதியில் வசிக்கும் மீனவர்களுக்கு குடியிருப்புக்களுக்கான நிலப்பட்டா வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்துவோம்.

•             மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசை வற்புறுத்துவோம்,

•             ஆழ்கடல் மீன் வளங்களை கொள்ளையிட்டு கடலை சீரழிக்கும் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களின் உரிமைகளை திரும்பப்பெற மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்

•             மீன்பிடி வலைகள் அடிக்கடி சேதம் அடைவதால் அவற்றை முழு மானியத்தில் வழங்கிட வற்புறுத்துவோம்.

•             தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மீனவர்களுக்கான சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கவும், கேரளாவைப் போல் குரலெழுப்புவோம்.

•             விசைப்படகு மீனவர்களுக்கு டீசல் மானிய அளவை 3000 லிட்டராக உயர்த்திட வலியுறுத்துவோம்.

•             மீன்பிடி தடைகாலத்தில் நாள் ஒன்றுக்கு 500 வீதம் 61 நாட்களுக்கு நிவாரணம் வழங்க வற்புறுத்துவோம்.

•             மீனவ இளைஞர்களுக்கு கப்பல் துறையில் வேலைவாய்ப்பு பெறச் சிறப்புப் பயிற்சி மற்றும் சான்றிதழ் படிப்பு வசதிகளை உருவாக்க வற்புறுத்துவோம்.

•             உள்நாட்டு மீனவர்களுக்கு மீன்பிடி குத்தகை வழங்க, அவர்களது கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்குவதை கட்டாயமாக்க பாடுபடுவோம்.

•             மீன்பிடி சார்ந்த தொழில்களில் ஈடுபடும் அனைத்துப் பெண்களையும் மீனவத் தொழிலாளர்களாக அங்கீகரிக்க குரலெழுப்புவோம்.

60. சமூக சீர்திருத்தத்துறை

•             சமூக சீர்திருத்தத்  துறையை மீண்டும் கொண்டு வந்து சாதி, பாலினம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நடந்து வரும் பாகுபாடுகளைக் களையவும், போதைப் பழக்கத்திற்கு எதிராகவும் பரவலான பரப்புரையை மேற்கொள்ள சமூக ஊடகங்களை பயன்படுத்துவது, உரிய நிதி ஒதுக்கீட்டுடன் கலை விழாக்கள், குறும்படங்கள், விளம்பரங்கள் போன்றவற்றை கூடுதலாக்க வற்புறுத்துவோம்.

•             மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வலியுறுத்துவோம்.

61. பட்டியல் – பழங்குடி மக்களின் நலன்

•             தமிழகத்தில் பட்டியல் பழங்குடியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் வகையில் விதிகளை மாற்றி அமைக்க வலியுறுத்துவோம்.

•             ஆதி திராவிடர் நலத்துறை – சமூக நீதி – விடுதிகளை நவீன கட்டமைப்பு வசதியுடன் மேம்படுத்துவதும், பழங்குடியினர் உண்டு-உறைவிட பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வற்புறுத்துவோம்.

•             சமூகத்தில் தலித், பழங்குடி மக்கள் தங்கள் உரிமைகளை மீட்டுக் கொள்வதற்கான அடிப்படையான ஆற்றலை வழங்குவது நிலமே. உறுதியான நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் பட்டியல், பழங்குடி மக்கள் கையில் நிலம் கிடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வற்புறுத்துவோம்.

•             பஞ்சமி நிலங்கள் மீதான பட்டியல் இன மக்களின் உரிமையை சட்டரீதியாக நிலைநாட்டுவதும், அதற்கென்று மாநில அளவில் சிறப்புக் குழுவை தமிழக அரசு நியமித்திடவும் கூடுதல் கவனம் செலுத்துவோம்.

•             வீடில்லாத பட்டியல்-பழங்குடி மக்களுக்கு குடியிருக்க வீடுகள் உத்தரவாதப்படுத்தவும், பட்டியல், பழங்குடி மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிதிலமடைந்த தொகுப்பு வீடுகள் மராமத்து பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்திட வலியுறுத்தி போராடுவோம்.

•             அரசு தரிசு நிலங்கள் குறித்த விபரங்கள் வெளியிடுவதும், நிலமற்ற பட்டியல், பழங்குடி மக்களுக்கு அந்நிலங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதும், நகர்ப்புறங்களில் பட்டியல், பழங்குடி மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து அவர்களை அப்புறப்படுத்துவது கைவிடப்பட வேண்டுமென வற்புறுத்துவோம். மேலும், கடந்த காலத்தில் நகர்ப்புறங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு குடியமர்த்தப்பட்ட இடங்களில் வாழும் மக்களுக்கு போதுமான குடிநீர், சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட வசதிகளை செய்திட போராடுவோம்.

•             எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள் கறாராக அமல்படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்படுவதும், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி தமிழக முதலமைச்சரின் தலைமையில் உள்ள விழிக் கண்குழு ஆறு மாத காலத்திற்கு ஒருமுறை கூட்டப்படுவதையும், மாவட்ட அளவிலான விழிக் கண்குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்படுவதையும் உறுதி செய்ய கவனம் செலுத்துவோம். அக்குழுக்களில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவதையும், அவை முறையாக கூட்டப்படுகின்றதா என்பதை கண்காணிக்கவும் வலியுறுத்துவோம்.

•             ளுஊ/ளுகூ வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க மாவட்டங்கள் தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது, எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகள் 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஆறு மாத காலத்திற்குள் தண்டனை வழங்கும் சட்ட ரீதியான நடைமுறையை உறுதி செய்ய வற்புறுத்துவோம்.

•             அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட மாநில உயர்கல்வி நிறுவனங்களில் துப்புரவு பொறியியல் துறையை ஏற்படுத்தவும், அதன் மூலம் மனிதக் கழிவுகளை மனிதன் அகற்றும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், நவீன இயந்திரங்கள் கண்டுபிடிப்பதை ஊக்கப்படுத்தவும் வலியுறுத்துவோம்.

•             சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு கே.என். பாஷா ஆணையத்தின் பரிந்துரைகளை பெற்று சிறப்பு சட்டம் கொண்டு வருவதும், சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதற்கான சிறப்பு செல்கள் உருவாக்குவதும், இத்திருமணம் செய்து கொண்டவர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவும் வலியுறுத்துவோம்.

•             பட்டியல், பழங்குடியினர் மக்கள் தொகைக்கேற்ப துணைத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்வது, அமலாக்கம் குறித்து கண்காணித்து ஆய்வறிக்கை வெளியிட வலியுறுத்துவோம்.

•             தொழில் பூங்காக்கள் அரசு கொள்முதல், அரசு ஒப்பந்தங்கள், மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளில் விற்பனை அங்காடிகள் ஏலம் உள்ளிட்டவைகளிலும்,    வங்கிக்கடன், அரசு மானியங்கள் ஆகியவற்றிலும் பட்டியல் சமூகத்தினர் பழங்குடியினருக்கு பாரபட்சமின்றி உரிய பங்கினை அளித்திட வற்புறுத்துவோம். தலித் பெண் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவோம்.

•             தலித் பஞ்சாயத்து தலைவர்கள் சுய கௌரவத்துடன் அவர்களது கடமைகளை நிறைவேற்றும் வகையில் அவர்களுக்கு பாதுகாப்பு சூழலை ஏற்படுத்தித் தர வற்புறுத்துவோம்.

•             அனைத்து ஊராட்சிகளிலும் சமத்துவ மயானங்கள் ஏற்படுத்தவும், தலித் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் தனிக் கழிவறை கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டை பெறுவதற்கு போராடுவோம். கிராம பொதுச் சொத்துக்கள் ஒப்பந்தங்களில் தலித் மக்களுக்கு உரிய ஒதுக்கீட்டை செலுத்திட வலியுறுத்துவோம்.

•             வன உரிமைச் சட்டம் 2006ஐ முழுமையாக அமல்படுத்தி பாரம்பரியமாக வன பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களின் நிலங்களுக்கு நில உரிமைச்சான்று வழங்கவும், பழங்குடியில்லா இதர விவசாயிகளுக்கும் நிலப்பட்டா வழங்கவும் போராடுவோம்.

•             சமவெளி பகுதிகளில் அரசின் தரிசு நிலம் / புறம்போக்கு நிலம் / வன ஓர நிலங்களில் வாழ்ந்து வரும் பழங்குடி மக்கள் குடும்பங்களுக்கு தலா இரண்டு ஏக்கர் நிலம் வழங்கிட குரலெழுப்புவோம்,

•             வீடுமனையற்ற பழங்குடி மக்களுக்கு தலா 3 சென்ட் வீட்டுமனைப்பட்டா வழங்க முயற்சி செய்வோம். அத்தோடு வீடற்ற பழங்குடி மக்களது குடும்பங்களுக்கு  வீடுகள், மின் இணைப்பு – குடிநீர் உட்பட அனைத்து அடிப்படை வசதியுடன் வீடுகள் கட்டித்தர வலியுறுத்துவோம்.

•             தமிழ்நாட்டில் வாழும் பழங்குடி மக்களான, மலைப்புலையன், வேட்டைக்காரன், ஈரோடு மாவட்ட மலையாளி ஆகிய பழங்குடி பிரிவு குடிமக்களையும், குறவன் இனத்தின் உட்பிரிவுகள், குருமன்ஸ் இனத்தின் உட்பிரிவுகளையும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க தனிக் கவனம் செலுத்துவோம். இனச்சான்று வழங்கிடும் அரசாணை எண் 104 ஐ விரைந்து அனைத்து மாவட்டங்களிலும் அமுல்படுத்த தனி கவனம் செலுத்துவோம். பழங்குடி மக்கள் அடர்த்தியாக வசிக்கும் மாவட்டங்களில் ஏகலைவா மாதிரிப்பள்ளிகள் மற்றும் தேவைக்கு ஏற்ப உண்டு உறைவிடப் பள்ளிகள் அமைக்க முயற்சிப்போம். விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணம் – மாதம் ரூ.2000 வழங்கிட வலியுறுத்துவோம்.

•             பழங்குடி இளைஞர்கள், இளம்பெண்கள் சுயதொழில் தொடங்கிட முழு மானியத்துடன், வங்கிகளில் கடன் வழங்கவும், பழங்குடியினருக்கான துணை திட்டம் (கூஊஞ) உரிய முறையில் அந்நிதி முழுவதும் பழங்குடி மக்களுக்கே செலவிடவும் வலியுறுத்துவோம்.

62. சிறுபான்மையினர் நலன்

•             தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் சமூகத்தில் இணைத்திட தொடர்ந்து வலியுறுத்துவோம்.

•             நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரைகளையும், நீதியரசர் சச்சார் ஆணைய பரிந்துரைகளையும் முழுமையாக அமலாக்கிட மாநில அரசையும், ஒன்றிய அரசையும் வலியுறுத்தி போராடுவோம்.

•             நீண்ட காலமாக விசாரணையின்றியும், விசாரணை முடியாமலும் சிறைகளில் வாடும் முஸ்லீம் கைதிகளை விடுவிக்க குரல் கொடுப்போம்.

•             மதவழி சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கான அரசியல் சாசன உரிமைகளை பாதுகாத்திட உறுதி செய்வோம். சிறுபான்மையின மக்களுக்கான இலவச வீட்டுமனை, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஓதுக்கீடுகளில் உரிய பங்கு உறுதி செய்ய வலியுறுத்துவோம். கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் அடக்க ஸ்தலங்களை அவர்களின் மக்கள்  தொகைக்கேற்ப அரசு உருவாக்கி தர வலியுறுத்துவோம்.

•             சிறுபான்மையினர் ஆணையத்தை மேம்படுத்தி செயல்படுத்தவும், மாநில / மாவட்ட அளவில் முன்னுக்கு வரும் பிரச்சனைகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் வலியுறுத்துவோம்.

63. மாற்றுத்திறனாளிகள் நலன்

•             2016 ஆம் ஆண்டு சட்டப்படி அனைத்து இடங்களும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் அணுகத்தக்கதாக வகையில் மாற்றப்படவும், அரசு மற்றும் தனியார் துறைகளில் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யவும் வலியுறுத்துவோம்.

•             மாற்றுத்திறனாளிகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்கு அடிப்படை தேவையான வேலை வாய்ப்பில் சட்டப்படி குறைந்தபட்சம் அரசு துறையில் 4 சதவீதம், தனியார் துறையில் 5 சதவிகிதம் என்பதை  உறுதிப்படுத்தவும், ஏற்கனவே பல்வேறு துறைகளில் வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகளை நிரந்தரமாக்க அரசாணை எண் 151-ஐ மீண்டும் கொண்டு வர வலியுறுத்துவோம்.

•             உதவித்தொகை கேட்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 6,000/-ஆக உயர்த்தி வழங்குவது, விண்ணப்பித்த இரண்டு மாதங்களுக்குள் உதவித்தொகை கிடைப்பதை உறுதிப்படுத்த வலியுறுத்துவோம்.

•             பாதுகாப்பற்ற பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டந்தோறும் பாதுகாப்பு இல்லங்கள் அரசே நடத்தவும், இந்த இல்லங்களில் உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பு, அத்துடன், கவுன்சிலிங் ஏற்பாடு, மருத்துவ ஆலோசனை ஏற்பாடு, பொழுதுபோக்கு ஏற்பாடுகள், உடற்பயிற்சி அல்லது விளையாட்டு ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்படவும், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்கள் வெளியே சென்று தனியாக வாழ விரும்பினால் அதற்கான அனுமதி அளிக்க வேண்டுமெனவும் வற்புறுத்துவோம்.

•             மத்திய அரசு வழங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை ருனுஐனு அனைவருக்கும் கிடைப்பதை ஓராண்டிற்குள் உறுதிப்படுத்தவும், அரசின் அனைத்து கணக்கெடுப்புகளிலும் மாற்றுத்திறனாளிகள் இருப்பதை பதிவு செய்யவும், குறிப்பாக ஆதார், குடும்ப அட்டை, 100 நாள் வேலை அட்டை உள்ளிட்ட அனைத்திலும் குறிப்பிட ஏற்பாடு செய்யவும் வலியுறுத்தப்படும்.

•             மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கணக்குகள் துவங்க, பராமரிக்க, வங்கி கடன் பெற நடைமுறைகளை எளிதாக்க வற்புறுத்துவோம். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் அவர்களின் தேவைக்கேற்ப விலை இல்லாமல் அரசே வழங்குவதை வலியுறுத்துவோம்.

•             தமிழகம் முழுவதும் சொந்த வீடு இல்லாத மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக அரசே வீடு கட்டி கொடுக்கவும், சொந்த மனை வைத்திருப்பவருக்கு மானியத்துடன் கடன் வழங்கி வீடு கட்ட உதவி செய்திடவும் வலியுறுத்துவோம்.

•             உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து மேல்படிப்புகளுக்கும் தடையற்ற நிலையை கல்வி நிலையங்களில் உருவாக்க வற்புறுத்துவோம். (சைகை மொழிபெயர்ப்பாளர், பதிலி எழுத்தர் தேர்வு, பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு எழுத்துக்கள் கொண்ட புத்தகங்கள் உள்ளிட்ட வசதிகள்.)

•             உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன உறுப்பினர் தேர்வு ஜனநாயகப் பூர்வமாக அமைய வற்புறுத்துவோம்.

64. பால் பன்மையினர் நலன் (டுழுக்ஷகூணுஐஹ+)

•             ஒவ்வொரு நபரும் தமது பாலின அடையாளத்தை தாமாகவே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை வழங்கியிருக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அங்கீகரிக்க மறுத்து அவர்களது தனி மனித மாண்பை சிதைக்கும் விதத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தத்தை கடுமையாக எதிர்ப்போம்.

•             திருநர் குறித்து சரியான புள்ளி விவரங்கள் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்துவோம்.

•             வீட்டை விட்டு வெளியேறும் / வெளியேற்றப்பட்ட திருநர் மற்றும் பால்பன்மையினர் பாதுகாப்பை உறுதிப்படுத்த, தற்காலிக தங்குமிடங்களை மாவட்ட வாரியாக விரிவுபடுத்த வலியுறுத்துவோம்.

•             திருநர் மற்றும் பால்பன்மையினர் குறித்த விழிப்புணர்வை அறிவியல் பூர்வமாக மேற்கொள்ளல். குறிப்பாக கல்வி நிறுவனங்கள், மருத்துவம் மற்றும் காவல்துறை, பொதுத்துறை நிறுவனங்களில் முயற்சி மேற்கொள்வோம்.

•             மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் திருநர்களுக்கென தனி வார்டுகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (அரசு மற்றும்  தனியார் மருத்துவமனைகளில்) பால்மாற்று அறுவை சிகிச்சை வழங்க வலியுறுத்துவோம்.

•             நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (கூசூளுஊக்ஷ)  மற்றும் முதலைமைச்சர் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் திருநர்களுக்கு  வீடுகள் வழங்க முன்னுரிமை கோரி போராடுவோம்.

•             தமிழகத்தில் முன்னோடியாக உள்ள திருநர் மருத்துவ சேவை மையங்களை மேம்படுத்தவும், 2019 திருநர் சட்டத்தின்படி மருத்துவமனைகளில் புகார் செல் அமைக்கவும் வற்புறுத்துவோம்.

65. தமிழக இயற்கை வளங்கள் பாதுகாப்பு

•             தமிழகத்தின் காடுகள், ஏரிகள், கடல், ஆறுகள், வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சூழலை பாதுகாக்க வேண்டியது முக்கிய கடமை.

•             விதிமுறைகளுக்கு முரணாக, பல்லுயிரிகளின் வாழ்விடமாக திகழும் காடுகள் கண்மூடித்தனமாக அழிக்கப்படுவதும், மரங்கள் வெட்டப்படுவதும் நிறுத்தப்பட பாடுபடுவோம்.

•             ஆற்றுப்படுகையில் வரைமுறையற்ற வகையில் மணல் அள்ளுவது, அளவுக்கு மீறிய தண்ணீர் சுரண்டல், நீர்நிலைகள் மாசுபடுதல், கடலில் மீன், உயிரி வளங்கள் அழிந்து போகும் வகையில் கழிவுகள் கொட்டப்படுவது போன்ற அனைத்தும் நிறுத்தப்பட்டு இயற்கை வளங்களை பாதுகாக்க வற்புறுத்துவோம்.

•             மிக முக்கியமான நன்னீர் வளம் பாதுகாக்க அதன் சேமிப்பு அமைப்புகளான ஏரிகள், கண்மாய்கள், குளங்களை வருடந்தோறும் மழைக்காலத்திற்கு முன்னர், தூர்வாரி மழைநீர் சேமிப்பதை உறுதி செய்ய பாடுபடுவோம். பல்லுயிர் பாதுகாப்பின் ஒரு முக்கிய அங்கமாக தாவர மரபணு வளங்களும் பாதுகாக்க வற்புறுத்துவோம்.

•             தமிழகத்தில் தாது மணல் உள்ளிட்ட கடலோர வளங்கள், கனிம வளங்கள், காடுகள், மரங்கள், உயிரினங்கள் அனைத்தும் முறையாக பராமரித்து, பாதுகாத்து, பொறுப்புடன் பயன்படுத்துவதன் வழியாக தமிழகத்திற்கு மக்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான நிலையான வளர்ச்சி உறுதி செய்ய வற்புறுத்துவோம்.

66. பத்திரிக்கையாளர் நலன்

•             தற்போதுள்ள பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் ஊரகப் பத்திரிக்கையாளர் உள்ளிட்ட அனைவரையும் இணைத்து, அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஆணையமாக மாற்றி அமைத்திட குரல் கொடுப்போம்.

•             ஓய்வூதியம் பெறும் விதிமுறைகளை எளிதாக்கவும், பணியின் போது மரணம் அடையும் பத்திரிகையாளர் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவி பாகுபாடு இல்லாமல் அனைத்து வகை பத்திரிக்கையாளர்களுக்கும் வழங்கிடவும் வலியுறுத்துவோம்.

•             சிறு பத்திரிக்கைகளின் இருப்புக்கு எதிரான  அரசாணையைத் திரும்ப பெற்று அவர்களுக்கு நிறுத்தி வைத்துள்ள அங்கீகார அடையாள அட்டைகளை உடனடியாக வழங்கிட வற்புறுத்துவோம்.

67. விளையாட்டு

•             மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் வார்டு வாரியாக கட்டணமற்ற டர்ப் விளையாட்டு மைதானங்கள் உருவாக்கிட வற்புறுத்துவோம்.

•             இளம்பெண்களுக்கான பிரத்யோக விளையாட்டு மைதானங்கள் உருவாக்குவது, குழந்தைகள் முதலே விளையாட்டு திறன் கண்டறிந்து அவர்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க அனைத்து கல்விநிறுவனங்களிலும் உறுதி செய்திட கவனம் செலுத்துவோம்.

•             பாலின பாகுபாடு இல்லாமல் பால் பன்மையினர் உட்பட அனைவருக்கும் வாய்ப்புகளும், பயிற்சிகளும் அளிக்கவும், கல்வி நிலையங்களில் அதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்தவும் வலியுறுத்துவோம்.

•             அனைத்து நகர, கிராமப்புறங்களில் மக்கள் தொகைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் மக்கள்  நடைபயிற்சி மேற்கொள்ளவும், அடிப்படை உடற்பயிற்சி மற்றும்  விளையாட்டுகளுக்கு உள் மற்றும் வெளி அரங்கங்கள், பொதுப் பூங்காக்களை அமைத்திடவும், கார்ப்பரேட்களின்  கொள்ளை லாபத்திற்கு மாறாக அரசின் சார்பிலேயே தீம் பார்க் மற்றும் பொழுதுபோக்கு மையங்களை உருவாக்கவும் வலியுறுத்துவோம்.

68. இணையம்

•             இணைய அணுகலை அடிப்படை உரிமையாக்க சட்டமியற்றுதல், அனைவருக்கும் இணைய அணுகலை இலவசமாக்கி, டிஜிட்டல் ஏற்றத்தாழ்வை சரி செய்யவும்,  அனைவருக்கும் டிஜிட்டல் கல்வி அளிப்பதை இயக்கமாக முன்னெடுக்கவும் வலியுறுத்துவோம்.

•             இணையத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் வன்முறைகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவோம்.

•             இணைய வழி முறைகேடுகளை (னுபைவையட ஹசசநளவ) தடுக்கும் விதத்தில் சைபர் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வற்புறுத்துவோம்.

•             தனிநபர் தகவல்கள் சேகரிப்பை சமூக வலைத்தள நிறுவனங்கள் அனுமதியின்றி பயன்படுத்துவதை தடுக்க குரல் கொடுப்போம்.

•             தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (ஐகூ ஹஉவ) இன் சர்ச்சைக்குரிய பிரிவான 69ஹ-ஐப் பயன்படுத்தி ஜனநாயக குரல்களை ஆளும் கட்சி ஒடுக்க பயன்படுத்துவதற்கு எதிராக, கருத்துரிமையைப் பாதுகாக்க வற்புறுத்துவோம்.

69. கலை, இலக்கியம்

•             தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியுள்ள படைப்பாளிகளின் படைப்புகளை பாட நூல் நிறுவனம் மூலம் அச்சிட்டு மலிவு விலையில் கிடைப்பதற்கு வலியுறுத்துவோம்.

•             பள்ளி, கல்லூரிகளில் மதவெறி அமைப்புகளின் ஊடுருவலை தடுக்க மதச்சார்பற்ற கலை, இலக்கிய மன்றங்களின் செயல்பாட்டை அதிகரிக்க வலியுறுத்துவோம். ஒவ்வொரு பள்ளியிலும் நாடகம், இசை மற்றும் நுண்கலை பாட வேளைகளை உருவாக்க வலியுறுத்துவோம். அனைத்து மாவட்டங்களிலும் கவின் கலை கல்லூரிகளை தொடங்க வலியுறுத்துவோம். கலை, பண்பாட்டுத்துறை மூலம் சங்கமம் போன்ற நிகழ்வுகள் மற்றும் நாடக இசைக்குழுக்கள் நடத்திட நிதி உதவி கேரள, கர்நாடக அரசுகள் வழங்குவதைப் போல் தமிழ்நாட்டிலும் வழங்கிட வலியுறுத்துவோம்.

•             குறைந்த வாடகை கட்டணத்தில் கலை, இலக்கிய நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பொதுநிகழ்ச்சிகள், மாநாடுகள் நடத்தும் வகையில் முக்கிய நகரங்களில் அரசின் சார்பில் பொதுமாநாட்டு அரங்கங்கள் உருவாக்க வலியுறுத்துவோம். புத்தக திருவிழாக்கள் ‘அறிவுத் திருவிழாக்களாக’ அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுவதை வலியுறுத்துவோம்.

•             நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசுப் பேருந்துகளில் முழுக் கட்டணச் சலுகை வழங்க வலியுறுத்துவோம். அழிந்து வரும் நிலையில் உள்ள நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க உரிய விற்பன்னர்களைக் கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.

70. சிறார் இலக்கியம்

•             சிறார் கலை இலக்கிய ஆய்விற்கும், வளர்ச்சிக்கும் தமிழ்நாடு அரசு சிறார் கலை இலக்கிய கழகம் தொடங்க வலியுறுத்துவோம். பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சிறார் இலக்கிய பாடம் இணைப்பது, பள்ளி நூலகங்களில் குழந்தை மைய நூலகங்களுக்கான பிரிவுகளை உருவாக்குவதை வலியுறுத்துவோம்.

•             மாவட்டங்கள்தோறும் நடைபெறும் புத்தக திருவிழாக்களில் சிறார் நூல்களுக்கென்று தனி அரங்குகள் அமைக்க வலியுறுத்துவோம். புத்தக திருவிழாக்கள் அறிவுத் திருவிழாக்களாக நடைபெற வலியுறுத்துவோம். மாவட்டந்தோறும் தனியாக சிறார் நூலகங்கள் அமைக்க வற்புறுத்துவோம்.

71. நூலகம்

•             தமிழகத்தில் மாவட்ட, வட்ட தலைநகரங்களில் உள்ள அரசு நூலகங்கள் உயர்தொழில்நுட்பத்துடன் கணினிமயமாக்கப்படுவதோடு,  நூலகங்களுக்குத் தேவையான பல்துறை நூல்கள் கிடைத்திட வற்புறுத்துவோம். போட்டித் தேர்வு தயாரிப்புக்கு உதவக் கூடிய கட்டமைப்பை ஏற்படுத்திட வலியுறுத்துவோம்.

•             கிராம ஊராட்சிகளில் உள்ள நூலக கட்டிடங்களை பராமரித்து காலை,மாலை திறந்து வைத்து செயல்படுத்த வலியுறுத்துவோம்.

•             மாநகராட்சி, நகராட்சி பேருந்து நிலையங்களில் அரசுக்குச் சொந்தமான கடைகளில் சலுகை வாடகையில் புத்தகக் கடைக்கான எண்ணிக்கையை இரட்டிப்பாக்க அரசாணை வெளியிட வலியுறுத்துவோம். நூலக ஆணைக்குழுவின் எழுத்தாளர்களும், இலக்கிய அமைப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வலியுறுத்துவோம்.

•             உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூலிக்கப்படும் நூலக வரியை நூலக மேம்பாட்டிற்காக, விரிவாக்கத்திற்காக பயன்படுத்த வற்புறுத்துவோம்.

•             கல்வி நிலையங்களில் வாரம் ஒருமுறை நூலக இடைவேளை இருப்பதையும், மாதம் ஒருமுறை நூல் அறிமுகத்தையும் செய்து வாசிப்பு பழக்கத்தை உருவாக்கிட வற்புறுத்துவோம்.

•             தமிழ்நாட்டில் உள்ள பெருநகரங்களில் புத்தக பூங்காக்கள், வாசிப்பு அரங்குகள் உருவாக்க வலியுறுத்துவோம்.

மதச்சார்பின்மை – மாநில உரிமை பாதுகாப்போம்!

உழைக்கும் மக்கள் குரலை உரத்து முழங்குவோம்!!

* * *