அரசியல் தமைமைக்குழுசெய்தி அறிக்கை

அதானி வசமாகும் நாட்டின் தானியக் களஞ்சியங்கள் மோடி அரசுக்கு சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கண்டனம்!

11

இந்திய உணவுக் கழகத்தின் தானியக் களஞ்சியங்களை அதானி – லீப் குழுமத்திற்குத் தாரை வார்ப்பதை ஒன்றிய அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

கார்ப்பரேட் மயமாக்கப்படும் ஆபத்தான முயற்சி அம்பலம்

இந்திய உணவுக் கழகத்தின் (FCI) தானியக் களஞ்சியங்களை நவீனமய மாக்கும் திட்டத்தில், அதானி மற்றும் லீப் இந்தியா நிறுவனங்களின் ஆதிக்கத்தை அம்பலப்படுத்தி சமீபத்தில் ‘நியூஸ்லாண்ட்ரி’ (Newslaundry) ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் பொது உணவுப் பாதுகாப்பு உள்கட்டமைப்பு கார்ப்பரேட் மயமாக்கப்படும் ஆபத்தான முயற்சி அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மொத்தம் 16,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 134 தானியக் களஞ்சிய ஒப்பந்தங்களில், அதானி அக்ரி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் மற்றும் லீப் இந்தியா புட் & லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் 110 ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதானி – லீப் வசம் போகும் நாட்டின் தானியச் சேமிப்பு

இதன்மூலம் இந்தியாவின் தானியச் சேமிப்பு வலைப்பின்னலின் பெரும் பகுதியின் மீதான கட்டுப்பாடு இந்நிறுவனங்களின் கைக்குச் சென்றுள்ளது.

இத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், இந்திய உணவுக் கழகமே (FCI) ஆரம்பத்தில் ஒரு “ஏக போக எதிர்ப்பு” (anti-monopoly) விதி யை முன்மொழிந்திருந்த போதிலும், தற்போது இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து, இக்களஞ்சியங்களில் சேமிக்கப்பட உள்ள மொத்தம் 60 லட்சம் மெட்ரிக்டன் தானியங்களில், சுமார் 46.5 லட்சம் மெட்ரிக்டன் தானியங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள இருக்கின்றன.

தனியார் ரயில்வே வலைப்பின்னலுக்கும் ஏற்பாடு

அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் லிமிடெட் (Adani Ports and SEZ Ltd) நிறுவனத்தின் ஓர் அங்கமான அதானி அக்ரி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தானியக் களஞ்சியங்களை விநியோக மையங்களுடன் இணைப்பதற்காக ஒரு பெரிய தனியார் ரயில்வே வலைப் பின்னலை அமைத்து வருகிறது.

இதன் மூலம், கொள்முதல் முதல் சேமிப்பு, போக்குவரத்து மற்றும் ஏற்று மதி வரையிலான விநியோகச் சங்கிலியின் அனைத்து நிலைகளின் மீதான தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்திக் கொள்ள அதானி குழுமத்திற்கு, இந்திய உணவுக் கழகத்தின் மேற்கண்ட திட்டம் வழிவகை செய்கிறது.

பின்வாசல் வழியாக வரும் மூன்று வேளாண் சட்டங்கள்

மேற்கூறிய அம்பலப்படுத்தலின் படி, இத்திட்டத்தின் ஒப்பந்தப்புள்ளி கட்டமைப்பில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய உணவுக் கழகத்தினால் முன்மொழியப்பட்டிருந்த ‘ஏகபோக எதிர்ப்பு’ விதி, ‘வலுவான நிதிப் பின்னணி’ கொண்ட நிறுவனங் களுக்குச் சாதகமாகச் செயல்படும் வகையில் ‘நிதி ஆயோக்’ மற்றும் பொருளாதார விவகாரத் துறையின் தலையீட்டின் விளைவாக தற்போது நீக்கப்பட்டுள்ளது.

மூன்று வேளாண் சட்டங்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு, இந்திய விவசாயத்தைக் கார்ப்பரேட்மய மாக்கும் திட்டத்தை ‘பின்வாசல் வழி யாக’ மீண்டும் திணிப்பதற்கான முயற்சியே இது என்பது தெளிவாகத் தெரிகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டரீதியான உத்தரவாதம் அளிப்பது தொடர்பாக விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறை வேற்ற அரசு மறுத்து வரும் அதே வேளையில், மிக முக்கியத்துவம் வாய்ந்த பொது விநியோக அமைப்பை யும் — அதன் விளைவாக இந்தியாவின் உணவுப் பாதுகாப்பையும் — அரசு பலவீனப்படுத்தி வருகிறது.

அதானி கொள்ளைக்காக ‘ஏகபோக எதிர்ப்பு விதி’ நீக்கம்

இந்நிலையில், தானியக் களஞ்சியத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட ‘ஏகபோக எதிர்ப்பு’ விதியை உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. பொது முதலீடுகள், இந்திய உணவுக் கழகத்தின் உள்கட்டமைப்பைத் தனியார் ஏகபோக நிறுவனங்களிடம் தாரை வார்ப்பதற்குப் பதிலாக, உணவுக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படு த்துவதற்கே பயன்படுத்தப்பட வேண்டும். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் அதிகாரம் குவிக்கப்படுவதை எளிதாக்குவதில், ‘பொது – தனியார் கூட்டாண்மை மதிப்பீட்டுக் குழு’ மற்றும் பல்வேறு அரசு அமைச்சகங்கள் வகிக்கும் பங்கு குறித்து விசாரிப்பதற்கு, ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட வேண்டும். இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு உள்கட்டமைப்பைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்று வதை எதிர்த்து நிற்பதற்கு, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.

Leave a Reply